சசிகலா கடந்த சில தினங்களாக ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அதில் ஒரு பகுதியாக நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு விஸ்வரூப தரிசனம் காண 5 அடி வேலுடன் வேல் காணிக்கை செலுத்த சென்றார். விஸ்வரூப தரிசனம் முடித்து விட்டு ஹோட்டலுக்கு திரும்பிய சசிகலா செய்தியாளர்களிடம் :- நீங்கள் அதிமுக கட்சியில் இணையப் போகிறார்கள என்ற கேள்விக்கு “நான் அதிமுகவில் தான் இருக்கிறேன் என் கட்சி அதிமுக தான் என்றார். அவர் திருச்செந்தூருக்கு வந்த காரிலும் அதிமுக கொடி தான் முன்னாள் பறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசுகையில் நான் ஒரு வேண்டுதல் காரணமாகவே திருச்செந்தூருக்கு வேல் காணிக்கை கொடுத்தேன். மீண்டும் ஆன்மீகப் பணி முடித்துவிட்டு அரசியலுக்கு மக்கள் பணியாற்ற வரப்போகிறேன். மக்களையும் சந்திக்க வருகிறேன், இந்த ஓராண்டு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது பெண்கள் தனியாக ரோட்டில் நடமாட முடியவில்லை போலீஸ் நிலையங்களில் திமுகவினரால் கட்டப்பஞ்சாயத்து நடைபெறுகிறத அதனால் சட்ட ஒழுங்கை மீண்டும் சரிசெய்ய வேண்டும் இந்த ஓராண்டு ஆட்சியில் திமுக சரியாக செயல்படவில்லை. அம்மா ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் மிக சீராக இருந்தது அதே போன்று ஒரு ஆட்சியை நான் கொடுப்பேன் என்றார்.
