சசிகலா புஷ்பாவையும், அவருக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நபரையும் ஒரே குழுவில் இணைந்து பணியாற்ற சொல்லிய பாஜக

தமிழ்நாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரின் 65 ஆவது நினைவு தினம் கடந்த 16ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனை ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்களும் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். இதனாலேயே அந்த மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. திமுக அதிமுக பாஜக என எல்லா கட்சியினரும் இங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது பாஜக தொடர்பான ஒரு வீடியோ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக சார்பில் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன். ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வந்தனர்.

அப்போது தான் இந்த வீடியோவும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூட்டம் அலைமோதுகிற அந்த நேரத்தில் கூட்டத்துக்கு நடுவே முன்னாள் எம் பி யும் பாஜக மாநில துணைத்தலைவரும் ஆன சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தும் போது அவருக்கு பின் மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி சசிகலா புஷ்பாவின் உடல் பாகங்களில் கை வைத்து தடவ முயற்சி செய்திருக்கிறார். சசிகலா புஷ்பா தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு அவரது கையை இரண்டு முறை விளக்கி விட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்த விடியோவை பார்த்த பலர் அவரை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என கூறி வந்தனர். மேலும் சசிகலா புஷ்பாவும் இந்த சம்பவத்தை பற்றி வாய் திறக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் சீண்டல் கொடுத்த பொன் பால கணபதி நீக்கப்படுவாரா அல்லது சஸ்பெண்ட் செய்யப்படுவாரா என எல்லோரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக தற்போது அமைக்கப்பட்ட குழுவில் பாலகணபதியையும் சசிகலா புஷ்பாவையும் ஒரே குழுவில் இணைத்து அதிர்ச்சி அளித்திருக்கிறது.

“முஸ்லிம்களிடம் சங்கி சேட்டை செய்வது போல தலித்துகளிடம் செய்யாதீர்கள்” – எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த திருமா

அதாவது கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை என பல்வேறு இடங்களில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யவும் அந்த பாதிப்புகளை கண்டறியவும் பாஜக தலைமை குழுவை நியமித்தது. அதில் ஒரு குழுவில் பாஜக எம்எல்ஏ காந்தி தலைமையில் அமைக்கப்பட்டது. அந்த குழுவின் உறுப்பினராக சசிகலா புஷ்பா இருக்கிறார். அதே குழுவில் சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட பொன் பாலகணபதியும் இடம்பெற்றுள்ளார். தற்போது இந்த சம்பவம் பாஜகவினர் மட்டுமில்லாமல் அரசியல் களத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Spread the love

Related Posts

மாலை வேலையில் பிடித்த பெண்களுடன் ஆண்கள் தாம்பத்திய உறவு மேற்கொள்ளலாம் | இப்படி ஒரு வினோத கிராமமா ?

மாலை வேளையில் எந்த ஆண்களுடனும் பெண்கள் வெளியே சென்று வரலாம் என்ற கட்டுப்பாடுகளை வைத்திருக்கும் ஒரு

“நான் செய்தது தவறா ?” ஸ்விக்கி பாய்யை அடித்ததற்கு உண்மையான காரணம் என்னவென்று அவர் பக்க நியாயத்தை சொன்ன காவலர்

கோவையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்விக்கி டெலிவரி பாயை கன்னத்தில் அறைந்தற்காக காவலர் சதீஷை பணியிடை

மனைவியுடன் பிக்னிக்கில் ரொமான்ஸ் செய்த கே ஜி எஃப் நடிகர் யாஷ் | இணையதளத்தில் பகிர்ந்த மனைவி

கே ஜி எஃப் 2 படத்தின் கதாநாயகன் யாஷ் அவரது மனைவி ராதிகா பண்டிட் உடன்