சமூக வலைதளங்களில் ஹை கோர்ட் தீர்ப்பு குறித்தும் நீதிபதிகள் குறித்தும் மிகவும் அவதூறாக பதிவிட்ட தொடர்பாக வழக்கில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை மதுரை ஹைகோர்ட் ஏற்கனவே பதிவு செய்திருந்தது.
அந்த நடவடிக்கைக்கு பின் நாட்களிலும் youtube சேனலில் இந்த விவகாரம் குறித்து மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனால் கடுப்பான கோர்ட் நீதித்துறை பற்றி அவதூறு பரப்பியதாகவும் கிரிமினல் அவமதிப்பு வழக்கு என்று மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து இவர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் வழங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கருணாநிதியின் நினைவுச் சின்னமான பேனாவை வைக்க மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது

அதில் நீதித்துறையை மிகவும் தவறான முறையில் விமர்சித்ததால் அவமதிப்பு நடவடிக்கைக்காக சவுக்கு சங்கருக்கு சுமார் ஆறு மாதம் வரை சிறை தண்டனை வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை தற்போது கடலூர் சிறைக்கு மாற்றி உள்ளனர். அச்சுறுத்தல் காரணமாகவே அவரை மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறை துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது இவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ப்ளூ சட்டை அவர்கள் அவரது youtube பக்கத்தில் இது குறித்து பேசி உள்ளார். அதாவது சவுக்கு சங்கர் நான் சந்தித்திலேயே மிகவும் நேர்மையான மனிதர் அப்படிப்பட்ட ஒரு நேர்மையான மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை. அவர் எது கூறினாலும் தகுந்த ஆதாரத்துடன் கூறுவார். எதையும் ஆதாரம் இல்லாமல் அவர் பேச மாட்டார். அதனாலேயே அவருக்கு பல பிரச்சனைகள் வரும் என்பது நமக்கு தெரியும். இப்படி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு மனிதரை சிறையில் அடைத்த பின்னரும் நாம் அமைதியாக இருந்தால் அது சரி வராது.
#WeSupportSavukkuShankar#WeStandWithSavukkuShankar#ISupportSavukkuShankar pic.twitter.com/dFM8rcAYCk
— Blue Sattai Maran (@tamiltalkies) September 15, 2022
தற்போது மக்கள் மத்தியில் சவுக்கு சங்கர் ஒரு ஹீரோவாகி உள்ளார். அவருக்கு நாம் உறுதுணையாக இந்த காலகட்டத்தில் இருக்க வேண்டும் என வி சப்போர்ட் சவுக்கு சங்கர் என பேசி உள்ளார். தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. மேலும் அவரது கமெண்ட் செக்ஷனில் இந்தியன் நேஷனல் லீக் பார்ட்டியின் தலைவர் சவுக்கு சங்கருக்கு ஆதரவு தெரிவித்து ப்ளூ சட்டை மாறனுக்கு நீங்கள் கூறியது உண்மை சார் என பதில் அளித்துள்ளார். தற்போது அனைத்து பிரிவினரும் சவுக்கு சங்கருக்கு ஆதரவு தரும் வகையில் சமூக வலைதள பக்கத்தில் #WeSupportSavukkuShankar என டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
