திமுகவில் ஐடி விங் செகரட்டரி ஆக இருக்கும் டிஆர்பி ராஜா ஸ்டாலினைப் பற்றி விமர்சித்தால் மிதிப்போம் என கூறியதை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அவர்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
தமிழகத்தில் தற்போது ஆளும் திமுக அரசில் ஐடி விங் செகரட்டரி ஆக இருப்பவர் டிஆர்பி ராஜா. இவர் தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு ஒரு டுவீட் பதிவு செய்தார் அதில் அவர் கூறியதாவது :- “கருத்து சொல்லுங்கள் மாற்று கருத்து சொல்லுங்கள் இல்ல நாங்க சொல்றது பொய் தான் என்று கூட சொல்லுங்கள். நாகரீகமாக பதில் வரும் ஆனால் எங்கள் தலைவனை பற்றி விமர்சிக்க உங்களுக்கு தகுதியே கிடையாது. மீறி பேசினா உங்க அப்பன் ஆகவே இருந்தாலும் அவனை அடிப்போம்… இல்ல இல்ல மிதிப்போம் என்று அப்படியான அச்சுறுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு டீவீட் அவர் பதிவு செய்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அவர்கள் :- மிதி டா பாக்கலாம்… உன் தலைவா என்ன விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவனா ? வேண்டாம்… செருப்பு பிஞ்சிடும்… ஒழுங்கா ஆட்சி நடத்த துப்பு இல்ல வை சவடாலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… இவனையெல்லாம் ஐடி விங் தலைவனா போட்ட நல்லா விளங்கும்யா உங்க கட்சி என்று ஸ்டாலினை இதில் டேக் செய்திருக்கிறார்….

சவுக்கு சங்கர் தனக்கு ரிப்ளை செய்ததும் பதறியடித்து கொண்டு தாம் பயன்படுத்திய அந்த “அடிப்போம், மிதிப்போம்” போன்ற வார்த்தையை நீக்கிவிட்டு பொய்களையும், அவதூறுகளையும் புனைந்து விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே திருப்பி அடிப்போம் என்று வார்த்தைகளை மாற்றி தற்போது நாகரீகமான சொற்களுடன் புதிய டுவீட் பதிவு செய்து பழைய டுவீட் டெலீட் செய்துள்ளார்.
