அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர் ஒருவர் தவறி கீழே விழும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் சோத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நிவேதன். அச்சரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் அரசு பேருந்தில் தான் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் இவர் எப்பவும் போல படிக்கட்டில் தொங்கி தான் இவர் பயணத்தை செய்கிறார். அதேபோல படிக்கட்டில் தொங்கி சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் இருந்து சில இரும்பு கம்பிகள் மூலம் இடது கையில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளது, இதனால் படிக்கட்டில் தொங்கி வந்த அந்த மாணவர் நிலை தடுமாறி தொப்பேண கீழே விழுந்தான்.
நீதிமன்றத்திற்கு அல்வா கொடுத்து விட்டு தலைமறைவான மீரா மிதுன் | போலீசார் வலைவீச்சு

கீழே விழுந்தா அந்த மாணவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமாக இருக்கிறார். அவரின் அதிர்ஷ்டவசம் பின்னால் ஏதும் வாகனங்கள் வராததால் அவர் உயிர் தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அங்கிருந்த பொதுமக்கள் கேட்ட்டபோது,

இந்த வழித்தடத்தில் ஒரே ஒரு பேருந்து தான் வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதனால் கூடுதல் பேருந்துகள் இல்லாததே இதற்கு காரணம் எனவும் கூறுகின்றனர். உடனடியாக இதற்கு துரை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூடுதல் பேருந்துகளை இந்த சாலையில் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்மருவத்தூர் அருகில் அரசு பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளனார்
— DON Updates (@DonUpdates_in) August 30, 2022
நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்
📹 @journalistraj7 pic.twitter.com/q9oxbDLWGP