பள்ளி சீருடையில் மாணவி ஒருவர் புத்தகப்பையை பின்னால் மாட்டிக்கொண்டு தொடர்ந்து 5 நிமிடம் சாமி ஊர்வலம் பேண்ட் வாத்தியத்துக்கு குத்து டான்ஸ் ஆடும் செயலை அங்கிருந்த நூற்றுக்கணக்கான நபர்கள் ரசித்து அதை வீடியோ எடுத்துள்ளனர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளது.
விழுப்புரம் எம் ஜி சாலை வழியாக ஒரு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பேண்ட் வாத்தியம் முழங்க நூற்றுக்கணக்கானோர் அங்கு சுற்றி நின்றனர். அந்த இடத்தில் ஒரு பள்ளி மாணவி புத்தகப் பையை மாட்டிக்கொண்டு தொடர்ந்து 5 நிமிடம் அங்கு எல்லோரும் பார்க்கும் வகையில் நடனமாடியுள்ளார். இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்திலும் பரப்பியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஒரு பெண் அதுவும் பள்ளி சீருடையில் இருக்கும் போது பள்ளி புத்தகப் பையை சுமந்து கொண்டு இந்த மாதிரி வெளியில் நடந்து கொள்வது எரிச்சலூட்டும் வகையில் உள்ளது என்று பலர் கமெண்ட் அடித்துள்ளனர்.

மூன்று நாட்களுக்கு முன்புதான் சில பள்ளி மாணவிகள் செங்கல்பட்டு அருகே பஸ்சில் பீர் குடித்தது தொடர்பாக வெளிவந்த ஒரு வீடியோவும் வைரலாக பரவியது. அதனுடைய தாக்கம் குறைவதற்கு முன்பே தற்போது இன்னொரு ஒரு வீடியோ வெளிவந்திருக்கிறது சமூக வலைதள வாசிகளுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மாணவிகளே இப்படி செய்வது எரிச்சலூட்டுகிறது என்றும் பலரும் தெரிவிக்கின்றனர்.

கருமம்டா இன்னும் எத்தனை கொடுமைகளை பார்த்து தொலைக்கப் போறோமோ
— Arulanantham. K (@arulaanantham) March 25, 2022
படிக்க அனுப்புனாக்க ரோட்டுல குத்தாட்டம் போடுது
விழுப்புரம் அரசு பள்ளி மாணவி
ஏற்கனவே படிப்பில் பின்தங்கி இருப்பதாக அங்குள்ள நண்பர்கள் வருத்தத்தில் உள்ளனர் இதுல இது வேற pic.twitter.com/MN34c9seQR