திருநெல்வேலியில் பள்ளி மாணவிகள் பேருந்து நிலையத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்து அவரவர்களின் கல்வி நிலையங்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல பள்ளி நேரம் முடிந்ததும் வீடுகளுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் தான் வந்து பேருந்து ஏறுவார்கள் அந்த சமயத்தில் மாணவிகள் ஒருவருக்கொருவர் சரமாரியாக தலையைப் பிடித்து அடித்துக் கொண்டுள்ளனர்.
“தனி ஒரு மனிதராக நான் அண்ணாமலையை பாராட்டுகிறேன்” – அமைச்சர் துரைமுருகன் | இது லிஸ்ட்லியே இல்லையே

இந்த நிகழ்ச்சியானது ஆசிரியர்களுக்கு முன்பு அரங்கேறி உள்ளது. இதனால் அதிர்ந்து போன ஆசிரியர்கள் மாணவிகளை தடுக்க எவ்வளவோ முற்பட்டிருக்கின்றனர். ஆனால் மாணவிகள் நிறுத்துவதாக இல்லை ஆசிரியைகள் தடுத்தும் மாணவிகள் இப்படி தலை முடியை பிடித்து தாக்கிக் கொள்ளும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இவர்கள் அடித்து கொண்டார்கள் ஏன் அடித்து கொண்டார்கள் என யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த காவல் நிலையம் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
நெல்லை பாளை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் முன்னிலையில் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரல் pic.twitter.com/BbAZCplTq6
— Radhai Kamaraj_K (@kamarajkasi24) July 27, 2022