பெங்களூருவில் ஒரு பள்ளியில் மாணவிகள் பள்ளி சீருடையில் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சியும் வைரலாக இணைய தளங்களில் பரவியது.
பெங்களூருவில் பிஷப் காட்டன் பள்ளியில் படிக்கும் மாணவிகள் அந்தப் பள்ளி சீருடையுடன் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொள்கின்றனர். முடியை பிடித்து இழுத்து தரையில் படுக்க வைத்து முகத்தில் குத்துவது முதுகில் குத்துவது என ஆண்களை விடவும் பயங்கரமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். எதற்காக இந்த சண்டை நடந்தது என தெளிவாக தெரியவில்லை. எனினும் சிலர் இந்த மாணவிகள் பாய்பிரெண்ட் காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள் எனவும் சொல்கின்றனர்.

அதாவது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி இன்னொரு மாணவியின் காதலுடன் டேட்டிங் சென்றுள்ளார் எனவும் அதனால் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி என் காதலனுடன் நீ டேட்டிங் செல்கிறாயா என்று வேறு சில பெண்களுடன் அந்த மாணவி குரூப்பாக வந்து சண்டையை தொடங்கினர் என ஒரு தகவல் பரவுகிறது.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை எனவும் தெரியவில்லை அதனால் தெளிவான தகவல் என்ன என்பதை கண்டறிய பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் பெங்களூருவில் மிகப்பெரிய பள்ளியான இந்த பிஷப் காட்டன் பள்ளியில் படிக்கும் மாணவிகள் இப்படி ஒழுங்கீனமாக சாலையில் தலைமுடியை பிடித்து சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சி இணையதளத்தில் தீயாய் பரவி வருவதால் சில பேர் அந்த பள்ளியை குறை கூறி வருகின்றனர்.
Y'all need to even if y'all haven't already 😭😭😭 pic.twitter.com/fBbJv9CXoc
— chef (@Trexhater) May 17, 2022