நெல்லையில் மாணவர்களிடையே ஏற்பட்ட சாதி மோதலால் ஒரு மாணவன் பலியாகியுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 25ஆம் தேதி மாணவர்களிடையே கலர் கலராக கட்டும் சாதி கயிறுகளில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் சக மாணவர்கள் 12-ம் வகுப்பு படிக்கும் செல்வ சூரியன் என்ற மாணவனை தாக்கியுள்ளனர்.

அந்தத் தாக்குதலில் காயமடைந்த மாணவன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை அந்த மாணவன் இறந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதே பள்ளியில் பயிலும் மாணவர்கள் 3 பேர் மீது பாப்பாக்குடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இறந்த அந்த மாணவன் மீது பெல்ட் மற்றும் கற்களால் தாக்கியது தெரியவந்துள்ளது பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்பட்டது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
