கடந்த இரண்டு வருடங்களாக கொரனாவின் தாக்கத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. மாணவர்களை நலனுக்காகவும் ஆசிரியர்களின் நலனுக்காகவும் அந்த இரண்டு வருடங்கள் பொதுத்தேர்வை நீக்கிவிட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த சமயம் கொரோனா அச்சுறுத்தல் பெரிதாக இல்லாததால் மாணவர்களுக்கு கட்டாயமாக ஆப்லைன் முறையிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான அன்பாசிரியர் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நேற்று நடைபெற்றது. அந்த விருதை அன்பில் மகேஷ் அவர்கள் வழங்கினார்.
அப்போது அங்கு சில பெற்றோர்கள் தொடக்கப்பள்ளிகள் (அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை) படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கேட்ட அன்பில் மகேஷ் அவர்கள் இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்து சென்றார்.
