வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு 26 ஆம் தேதி வரை விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் மிகவும் கொடியதாக பரவி வருகின்றது. இதனால் இது பள்ளி குழந்தைகளை எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்று 26 ஆம் தேதி வரை பள்ளியை மூடலாம் என்று புதுச்சேரி அரசு முடிவு எடுத்து உள்ளது.

அதன்படி புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இந்த விடுமுறை யார் யாருக்கு பொருந்தும் என்றால் ஆரம்ப பள்ளி குழந்தைகளில் இருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை பொருந்தும். புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் பொருட்டு அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் பேரவையில் இதைப் பற்றி அறிவிப்பு வெளியிட்டார்.
