ஆன்மிகத்தில் இருக்கும் அறிவியல் உண்மைகள் | முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல

நம் முன்னோர்கள் மற்றும் நமது ஆன்மிகத்தில் குறைப்பட்டுவுள்ள 5 விஷயங்களுக்கு பின்னால் இருக்கும் அறிவியலை தான் இந்த பதிவில் நாம் பார்க்கவுள்ளோம்.

விசேஷ வீட்டில் வாழை மரம் மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும்.

மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்களின் கூட்டங்கள் வெளிப்படுத்தும் மூச்சுக் காற்றில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாகவே இருக்கும் இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றை தூய்மைப்படுத்தி ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவை தான் வாழைமரம் மற்றும் மாவிலை தோரணங்கள். அதனால் தான் இவற்றை வீட்டு விசேஷ நாட்களில் கட்ட சொல்கிறார்கள் முன்னோர்கள்.

வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சளை தடவவேண்டும்.

மஞ்சள் மிகவும் நல்ல கிருமிநாசினி வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்கு சென்று திரும்பும் நம்முடைய கால்கள் முதலில் மிதிப்பது நம்முடைய வாசல் நிலைப்படியில் தான் அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால் அந்தக் கிருமிகள் உள்ளே வரவிடாமல் தடுத்து நோய் தொற்றுகளை தவிர்க்க வழிவகுக்கும்.

நகம் கடித்தால் தரித்திரம்.

நகத்தைக் கடிக்கும் பொழுது நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வாய்க்கு சென்று நோய் தொற்றை உருவாக்கும் துணுக்குகளை விழுங்கினால் அதனால் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. அதனால் தான் நகம் கடிப்பதை தரித்திரம் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்

வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது.

நம் புவியின் மையப் பகுதியில் இருக்கும் காந்த விசையானது வடக்கு தெற்காக இயங்குகிறது எனவே வட திசையில் தலை வைத்துப் படுக்கும் பொழுது நம்முடைய மூளை செயல் திறன் குறைய வாய்ப்புள்ளது.

முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது

மரங்கள் மிகவும் அடர்த்தி இல்லாமல் மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் தான் முருங்கை அதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால் கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம்பட்டு கொள்ள வாய்ப்புண்டு. மேலும் கம்பளி பூச்சிகளின் புகலிடமே முருங்கை தான் என்பதால் வீட்டுக்குள்ளும் கம்பளிப் பூச்சிகள் அதிகம் பரவும் எனவேதான் வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது என்று அறிவுறுத்தினார்கள் நம் முன்னோர்கள்.

Spread the love

Related Posts

Video Viral | மாட்டிற்கு “கோ பூஜை” செய்த இங்கிலாந்து நாட்டின் பிரதமர் வேட்பாளர்

இங்கிலாந்தில் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனக் பசு மாட்டிற்கு பூஜை செய்யும் வீடியோ காட்சி

புது பட ரிவியூ | ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் நட்சத்திரம் நகர்கிறது படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

இப்ப நம்ம பாக்க போற படம் என்னன்னா துஷாரா விஜயன், காளிதாஸ், கலையரசன் போன்றவர்கள் நடித்து

“உடல் நலத்துடன் வாழ வேண்டும்” மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஸ்டாலின்

இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது 72 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

x