அன்பு தம்பி அண்ணாமலை அவர்கள் அஞ்சலகத்துறை பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க குரல் கொடுத்தால் என்னுடைய ஆதரவாளர்களின் ஓட்டு கூட அவருக்கே வரட்டும் எனக்கு ஒரு ஓட்டு போட வேண்டாம் என பேசி உள்ளார் சீமான்.
அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அண்ணா சாலையில் உள்ள அஞ்சலக அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சென்றார். அப்போது பேசிய அவர் தொழில்நுட்பங்கள் தற்போது வளர்ந்த நிலையில் பிரதமருக்கு கடிதம் எழுதக்கூடிய சூழ்நிலை தான் இன்றளவும் உள்ளது. நானும் என்னுடைய சிறிய வயதில் ராணுவத்தில் பணிபுரியக்கூடிய என்னுடைய நண்பர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் யாருக்கும் காதல் கடிதம் எழுதியதில்லை.

மத்திய அரசு தவறான பொருளாதார கொள்கை காரணமாக நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை வேண்டுமென்றே தனியார் மயமாக்க விரும்புகிறார்கள். அஞ்சல துறையில் பணிபுரிந்த ஓய்வு பெறுவர்கள் ஓய்வூதியம் கூட பெற முடியாத நிலையை எட்டி உள்ளது. இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி கடன் உள்ள நாட்டில் உலகத்தின் இரண்டாவது பெரிய பணக்காரன் என்ற நிலை எப்படி இருக்கும். ஆனால் மத்திய அரசு நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கியதுதான் இந்த அரசின் சாதனை என கூறினார்.
மேலும் மணல் மலை போன்றவற்றையும் மதத்தையும் வைத்து அரசியல் செய்யும் அன்பு தம்பி அண்ணாமலை அவர்களே இந்த அஞ்சலக துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்தால் அந்த ஊழியர்களின் ஓட்டுகள் அனைத்துமே உங்களுக்கே வரும் எனக்கு ஒரு ஓட்டு கூட வேண்டாம் என கூறியுள்ளார்.
