இந்துக்களைப் பற்றி அவதூறாக பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்த கருத்து தற்போது பெரிய வைரலாகி வரும் நிலையில் சீமான் அதற்கு குரல் கொடுத்துள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் :- “தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு 99 சதவீதம் மக்கள் எதிர்த்து தான் வருகின்றனர். முதல்வர் இதை கருத்தில் கொள்வாரா ? என்ற கேள்வி உள்ளது. நாட்டை ஆளுகின்ற முதல்வரின் கருத்து இதற்கு என்ன ? என்று விணவியுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வுக்கு அப்போது கொரோனாவை விட கொடுமையானது என்று பேசினார். ஆனால் இப்போது இவரை மின்கட்டணத்தை உயர்த்துகிறார்.
சீதாராமம் படத்துல வர்ற நம்ம சீதாவா இது ? | இப்படி இருக்காங்களே

இவர் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு கருத்து ஆளுங்கட்சியாக இருந்துக்கும் போது வேறொரு கருத்து என மாற்றி பேசுகிறார். நீங்கள் என்னதான் செய்ய விரும்புகிறீர்கள் சொல்ல வருகிறீர்கள் எதை எதிர்த்தீர்களோ அதையே தற்போது நடைமுறைப்படுத்துகிறீர்கள். கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழில் வழிபாடு உள்ளது தான் தலைமுறை வழிபாடு என் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும். மேலும் இந்துக்கள் குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் ஆர் ராசா தெரிவித்த கருத்து மிகப்பெரிய அளவில் தவறு இருக்கிறது என்பது போல் எனக்கு தெரியவில்லை” என சீமான் கூறியுள்ளார்.
