“எருமைமாடு கூட கருப்பா இருக்கு, அதற்காக அதை திராவிடன் என்று கூற முடியுமா ?” | யுவனை வெளுத்து வாங்கிய சீமான்

இசைஞானி இளையராஜா அவர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இருவரும் நிகரானவர்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா அவர்கள், மோடியின் ஆட்சி காலத்தில் அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை அம்பேத்கர் போற்றி இருப்பார் என்று கூறி இருந்தார். இதற்கு திராவிட அமைப்பினர் பலபேர் இசைஞானி இளையராஜாவுக்கு பல கண்டனங்களை விடுத்தனர். இருப்பினும் தான் பேசிய வார்த்தையை என்னால் திரும்பப் பெற முடியாது உங்களுக்கு எப்படி கருத்து சுதந்திரம் இருக்கு அதே போல எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்று கூறி தான் பேசிய வார்த்தையை திரும்ப பெற மறுத்துவிட்டார்.

“இளையராஜாவுக்கு பாரத ரத்னா கிடைக்கவேண்டும்”….”நான் அண்டங்காக்கா கருப்பு…” யுவனுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அவரது மகனான யுவன்சங்கர் ராஜா அவர்கள் இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு திராவிடன் என்று கேப்ஷன் போட்டு கருப்பு சட்டை மற்றும் கருப்பு வேட்டீயுடன் இருக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டு இருந்தார். இதற்க்கு இன்று பதிலளித்த திரு சீமான் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-

“நீ திராவிடனா இரு, இல்லை என்றால் தமிழனாய் இரு ஏன் குழப்பம். யுவன் சின்ன பிள்ளை என்பதால் புரிதல் இல்லை. ஏன் இத்தனை முகமூடி. எருமைமாடு கூடத்தான் ரொம்ப கருப்பாக இருக்கிறது அதற்காக அதை திராவிடன் என்று கூற முடியுமா? கேஜிஎப் நடிகர் யாஷ் கூட பெருமைமிகு கன்னடிக என்கிறார் அதேபோல பெருமைமிகு தமிழன் என்று மட்டுமே சொல்லலாமே ஏன் திராவிட தமிழன் என்று சொல்கிறீர்கள்” என்று இவ்வாறு பேசினார் சீமான்.

Spread the love

Related Posts

Watch Video | தொப்புளில் ஓட்டை போட்ட ஆடையை அணிந்து முன்னழகை காட்டி சுண்டி இழுக்கும் யாஷிகா பர்த்டே ஸ்பெஷல் வீடியோ

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான கதாநாயகியாக வலம் வருபவர். கொஞ்ச மாதங்களுக்கு முன்பு

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில்

ஜி.பி முத்துவை அமரவைத்து பைக் சாகசம் செய்த TTF வாசன் மீது பாய்ந்தது வழக்கு | கைவரிசையை காட்டும் காவல்துறை

TTF வாசன் மீது மூன்று பிரிவுகளில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ஜிபி முத்துவை