“பெரியார் தமிழ் தேசியத்தின் தலைவர் இல்லை, அவரை நாங்கள் ஒரு போதும் தலைவராக ஏற்கமுடியாது” மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்

தந்தை பெரியார் தமிழ் தேசிய தலைவரும் அல்ல, எங்கள் எதிரியும் அல்ல அவர் எங்கள் வழிகாட்டி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சியை துவங்குவதற்கு முன்னால் இருந்தே அவர் படங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் பெரியாரின் வாசம் சற்று அதிகமாகவே வீசும். அந்த அளவிற்கு பெரியார் சித்தாந்தத்தை கொண்டவர் சீமான் என்பது அப்போது இருந்த மக்கள் எல்லோருக்கும் தெரியும். அவர் பெரியாரை தனது மானசீக தலைவராக ஏற்றுக் கொண்டு அவரின் கொள்கைகளை வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் பேசி வந்தவர். இப்போது கூட சில சமயம் பெரியார் சித்தாந்தத்தை சிலவற்றை மேற்கோள்காட்டி எதிர்கட்சிகளை விமர்சித்து வருகிறார்.

ஆனால் தமிழ் தேசியம் என்ற கருத்தியலை முன்வைத்து அவர் பெரியாரை மிகவும் தாக்கி பேசியுள்ளார். தமிழ் தேசியத்தின் தலைவன் பெரியார் அல்ல என அவரையும் சேர்த்து திராவிடத்தையும் சரமாரியாக விமர்சித்து பேசி வருகிறார். தமிழர்களின் அடையாளத்தை அழித்தது திராவிடம் தான் என்று அவர் கூறிவருகிறார். தான் ஏற்றுக்கொண்ட தமிழ்தேசிய சித்தாந்தத்தின் அடிப்படையில் பெரியாரைப் பற்றிப் பேசும் போக்கை அவர் தற்போது கையில் எடுத்திருக்கிறார்.

முன்பு பெரியாரைப் பற்றி மேடைகளில் பேசி விட்டு தற்போது அவருக்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் என்னவென்றால் :- “பெரியார் எங்களுக்கு எதிர்ப்பாளர் இல்லை பெரியாரை தமிழ் தேசியத் தலைவராகவும் நாங்கள் ஏற்கவில்லை. மேலும் எங்கள் எதிரியாகவும் அவரைப் பார்க்கவில்லை. அண்ணல் அம்பேத்கர், புத்தர், மார்க்ஸ், லெனின், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஸ்டாலின் போன்றோர் வரிசையில் தான் பெரியாரை நாங்கள் பார்க்கிறோம்.

பெரியாரை பெருமைக்குரிய வழிகாட்டியாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். திராவிட கருத்தியலாளர்களை போல அதுவே வேதம் என்று இல்லாமல் பெரியாரையே நாங்கள் கேள்விக்கு உட்படுத்தும், எது ஒன்றையும் சந்தேகி, எல்லாவற்றையும் கேள்வி கேள், ஆய்வுக்குட்படுத்து, என்று சொன்னவர் தந்தை பெரியார். அதனால் அப்படிப்பட்ட அவரை நாங்கள் கேள்வி கேட்கிறோம், விமர்சிக்கிறோம், ஆய்வுக்கு உட்படுத்துகிறோம் என்று சொன்னார். பெரியாரும் சில விஷயங்களுக்கு போராடினார் தான் நாங்கள் அதை இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் பெரியார் மட்டும்தான் போராடினார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எங்கள் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதரிடமிருந்து பகுத்தறிவையும், தோழர் சிங்காரவேலரிடமிருந்து பொதுவுடமை சிந்தனையும் கற்றுக்கொண்டதாக மேடையில் பெரியாரே கூறியுள்ளார்” என்று பேசி இவ்வாறாக சீமான் அதை முடித்தார்.

Spread the love

Related Posts

பிரபல யூட்யூபரான இர்பான் ஓசி சோறுக்காக நல்ல விமர்சனத்தை கொடுத்த ஹோட்டலில் தற்போது 45 கிலோ கெட்டுப்போன மாமிசத்தை கைப்பற்றியிருக்கின்றனர்

பிரபல யூட்யூபரான இர்பான் ரோஸ் வாட்டர் எனப்படும் ஒரு ஓட்டலில் சென்று சாப்பிட்டுவிட்டு ஆஹா ஓகோ

டி. ராஜேந்தர் எப்படி இருக்காரு ஸ்டாலின் விசிட் – அலறிப்போன டாக்டர்கள்

ஒரு வாரத்திற்கு முன்பு தீடிர் நெஞ்சுவலி என தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தர் தமிழ்நாட்டில்

ஸ்மார்ட் போனை தலையணைக்கு கீழ் வைத்து படுப்பதால் ஏற்படும் விபரீதங்கள்

இரவு நேரங்களில் ஸ்மார்ட் போனை தலைக்கு கீழும் படுக்கையிலையும் அப்படியே வைத்துவிட்டு தூங்குவதால் என்னென்ன பக்க