“மதுரை ஆதீனம் ஒரு தேசியவாதி அவர் அரசியல் பேசுவதில் எந்த தவறும் இல்லை”- சீமான்

செய்தியாளர்களிடம் பேசிய சீமான் அவர்கள் மதுரை ஆதினம் ஒரு தேசியவாதி அவரை அரசியல் பேசக்கூடாது என்று சொல்வது தவறு என ஒரு கருத்தை முன்வைத்தார்.

மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் மா.சோ விக்டரின் ஆவணப்படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான் அவர்கள் சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் சட்ட ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்பியபோது சட்ட ஒழுங்கு யார் கையில் இருக்கிறதோ அவர்களை தான் கேட்கவேண்டும். கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்திருக்கிறது என்கிறோம் ஆனால் சென்னை கமிஷ்னர் 10 கொலைகள் தான் நடந்திருக்கிறது என கூறுகிறார்.

முதல்வருக்கு கிறித்துவ மதம் தொடர்பான புத்தகத்தை பரிசளித்து பாஜகவினரிடம் வெறுப்பை பெற்ற கலெக்டர்

ஒரு கொலை நடந்தாலும் கொலை கொலை தான் என சட்ட ஒழுங்கை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர் மதுரை ஆதினம் அரசியல் பேசக்கூடாது என விமர்சிக்கும் வேலையில் அவர் அரசியல் செய்வதில் என்ன தப்பு. மதுரை ஆதீனம் தமிழ் தேசியவாதி. வரிசையில் நின்று ஓட்டு போட கூடியவர் எனவே அவருக்கு அரசியல் பேச உரிமை உண்டு என அவருக்கு சாதகமாக பேசியுள்ளார். மேலும் தமிழகத்தில் எதிர்க்கட்சி தாங்கள் தான் என ஒரு குரல் எழுகிறது. ஆனால் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்க விரும்பவில்லை மக்களுக்கான முதன்மையான கட்சியாக நாங்கள் இருக்க விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் அண்ணாமலையின் ஊழல் பட்டியலை நாங்கள் ஏற்கிறோம் ஆனால் அதற்கு முன்பு 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலை பற்றி ஏன் அண்ணாமலை பேச மறுக்கிறார் ? என கேள்வி எழுப்பியுள்ளார் அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் போன்ற நடிகர்கள் படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய முடியவில்லை.. ஆனால் ஒரு கர்நாடக படமான கே ஜி எஃப் 2 இங்கு நன்றாக ஓடுகிறது. மேலும் வெளிநாட்டு படங்களும் இந்தியாவில் வெற்றி பெறும்போது தமிழ் படங்களை கர்நாடகாவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

புருஷனுக்கு டாடா சொல்லிவிட்டு புருஷனின் நண்பனுடன் உல்லாசம், கடைசியில் பிரிய மனமில்லாமல் இவர்கள் செய்த காரியம் என்ன ?

தர்மபுரி மாவட்டத்தில் கணவனின் நண்பனுடன் கள்ளக்காதல் வைத்துக்கொண்ட ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த

ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண்ணே இப்படி கேட்கலாமா ? நடிகை யாஷிகாவிடம் சைஸ் கேட்ட பெண் | பதிலடி கொடுத்த மற்றொரு பெண்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பின்னர் படங்களில் நடித்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் யாஷிகா.

பலூன் விற்கும் ஏழை குடும்பத்து பெண் அழகிய மாடலான சுவாரசியமான கதை | அடேங்கப்பா இம்புட்டு அழகா இருக்காளே

கேரளாவில் பலூன் விற்றுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மாடலிங் பெண்ணாக மாற்றி இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்பட

x