மயிலாடுதுறை சிதம்பரம் நடராஜர் கோயில் சென்ற இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அங்குள்ள தீட்சிதர்களுக்கு எதிராக நடக்கும் விஷயத்தை பற்றி பேசினார் அப்போது அவர் கூறியதாவது :-
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தீட்சிதர்களுக்கு எதிராக அரசு செயல்படாது, ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலைத்துறை தலையிடாது என திட்டவட்டமாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

மேலும் அவர் தருமை ஆதினத்தையும் சந்தித்தார் இதை அவர் அவரின் த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் :- “மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் அவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு, தருமபுரம் மடத்தில் விருந்தினர் மாளிகை திறப்பு விழா மற்றும் தருமை ஆதீனம் சார்பில் 27,000 மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தோம்.”
