தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ஆன்மீக புரட்சி நடக்கிறது என பேசியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த திருபுலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணிகளை பார்வையிட இன்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பார்த்து பார்வையிடச் சென்றார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர். :- “திருக்கோவிலை பாதுகாக்கும் வகையில் ஒரு ராடர் கருவி மூலம் இந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை அளவிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருபுலிவனம் ஈஸ்வரனுக்கு 9.27 ஏக்கர் நிலங்கள் அளவிடப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் 51000 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவிடும் பணி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. சுமார் 4 கோடி பக்கங்கள் அமைந்த கோவில ஆவணங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யக்கூடிய அளவிற்கு கோப்பை பதிவிடவும் பணிகள் நடந்து கொண்டு வருகிறது. இது தமிழக முதல்வர் ஆட்சியில் நடக்கும் ஒரு ஆன்மீகப் புரட்சி யாகும் இந்த பணிக்காக மட்டும் 150 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் 20 மண்டலலங்களில் 50 குழுக்களாகப் பிரிந்து இந்த வேலையை துரிதமாக செய்து வருகின்றனர். தேவை என்றால் மேலும் 100 குழுக்களாகவும் அதை விரைந்து செய்து முடிக்க பணிகள் தொடங்கப்படும்” என்று கூறினார்.
