இந்துக்களைப் பற்றி சர்ச்சையான முறையில் பேசிய ஆ.ராசாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு காது சரியாக கேட்கவில்லை என சைகை காட்டிய படியே நைசாக நழுவினார் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு.
தி.கா தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் ராசா பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த விழாவில் பேசிய அவர் நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், நீ இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், நீ பாரசீகனாக இல்லாமல் இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இது போன்ற கொடுமை வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அவை இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் ஆகத்தான் இருப்பாய். சூத்திரன் என்றால் விபச்சாரியன் மகன் இந்துவாக இருக்கும் வரை உன்னைப் பஞ்சவன் என்றும். நீ இந்துவாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவனாக தான் இருப்பாய் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் ? எத்தனை பேர் தீண்டத்தகாத ஆட்களாக இருக்க விரும்புகிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சனாதானத்தை அடியோடு அழிக்க வேண்டும் என அவர் கூறியிருக்கின்றார். அவரின் இந்த பேச்சை பாஜகவினர் தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு அவர்களிடம் பத்திரிகையாளர் ஒருவர் வீரமணி பாராட்டு விழாவில் எம் பி ராசா அவர்கள் இந்துக்களை பற்றி சச்சையான முறையில் பேசினார். அதற்கு உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது எனக்கு காது கேட்கவில்லை என்று சைகை காட்டிய படியே பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் இருந்து நழுவி சென்றார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. தற்போது இந்த வீடியோ வைரலாகியும் வருகிறது.
