அதிமுக-வை துரும்பு அளவுக்கு விமர்சித்தால் நாங்கள் தூண் அளவுக்கு பாஜகவை விமர்சிப்போம் என செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக அதிமுக அமைச்சர் பொன்னையன் அவர்கள் பாஜக என்னதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருந்தாலும் அவர்களின் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல திராவிட கொள்கைகள் மட்டும் தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என குற்றம் சாட்டினார். இதனை அடுத்து பொன்னையன்னுக்கு வி.பி துரைசாமி அவர்கள் பதில் அளித்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால் :-“பொன்னையன்னுக்கு சீட் கிடைக்காத விரக்தியில் பாஜகவை குற்றம் கூறுகிறார். 67 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியாக சரியாக செயல்படாத அதிமுக.
வெறும் 4 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து அதிமுக செய்ய வேண்டிய வேலையை பாஜக செய்து வருகிறது. அதனால் முதன்மை எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக திமுகவை எதிர்த்து எதுவும் பேச முன்வரவில்லை. நாங்கள் தான் திமுகவின் ஊழலை வெளியில் கொண்டு வருகிறோம் என்றார் துரைசாமி. இதற்கு தற்போது பதிலளித்துள்ள செல்லூர் ராஜு அவர்கள் அதிமுக தான் தற்போது பிரதான எதிர்க்கட்சி ஆயிரம் கிளைகளைக் கொண்டு செயல்படும் கட்சி அதிமுக. 1000 பேரை வைத்துக்கொள்வதால் எதிர்க்கட்சி எனக் கூற முடியாது.

பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம் மட்டும் தான். அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம். காக்கைகள் இறை போட்டால் கூட்டமாக யாரிடம் வேண்டுமானாலும் வரும். ஆனால் அந்த இரை காலியாகி விட்டால் எல்லாம் ஓடி விடும். அது போல தான் பாஜக. துரைசாமி எங்களை விமர்சனம் செய்வது எந்த விதத்திலும் நியாயம் அல்ல. திமுகவில் இருந்து பாஜகவுக்கு அவர் என் சென்றார் ? அதிமுகவை யாராவது துரும்பு அளவு விமர்சித்தாலும் நாங்கள் அவர்களுக்கு தூண் அளவுக்கு பதிலடி தருவோம். என தடாலடியாக பதில் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மத்திய அரசிடம் பதவி வேண்டும் என்பதற்காக பல அரசியலை செய்து வருகிறார். ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை மற்றும் எல் முருகன் ஆகியோர் அரசு பதவி பெற்றதை சுட்டிக்காட்டி அவர் கூறியுள்ளார்.
