கோவையில் உள்ள நவ இந்தியா பகுதியிலுள்ள ஒரு தனியார் விடுதியில் திமுக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகள ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து பேசிய செந்தில் பாலாஜி அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:- “கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதி 12 13 14 ஆகிய தேதிகளில் திராவிட பயிலரங்கம் தொடங்கப்படுகிறது. மேலும் கோவை மாவட்ட திமுகவிற்கு புதிய கட்டடத்தை கட்டும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அவிநாசி சாலையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது கட்டிடம் வடிவமைப்பு பணிகள் நடைபெறுகிறது. மிக விரைவில் அடிக்கல் நாட்டப்பட்ட திமுக இளைஞரணி தலைமையில் அடிக்கல் விழாவில் நடைபெறும். மேலும் மின்கட்டண உயர்வு பற்றி அவரிடம் கேள்வி எழும்பிய போது எடப்பாடி பழனிச்சாமி கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என பொய் சொல்லி வருகிறது. 2012 13 2014 என தொடர்ந்து மின் கட்டணம் அதிமுக ஆட்சியில் தான் உயர்ந்திருக்கிறது.

சுயமாக அவர்களுக்கு யோசிக்கும் அளவிற்கு புத்தி கிடையாது. தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது தொடர்பாக கோவை கொடிசியா அமைப்பினர் நடைமுறை படுத்தி இருக்கும் கருத்து கேட்க கூட்டங்களில் அவர்களது கருத்துக்களை பதிவு செய்ய ஒரு வாய்ப்பு இருக்கின்றது. அவர்கள் கோரிக்கையை நானும் பார்த்திருக்கிறேன். கோவையை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கு மாவட்டத்தில் உள்ள அணைத்து பூத் வாரியாக பணிகளை துவங்கியிருக்கின்றோம் எனக் கூறினார்.
மேலும் அவரிடம் ரஜினி மற்றும் ஆளுநர் சந்திப்பு குறித்து கேள்வி கேட்டபோது ரஜினி ஆளுநர் சந்திப்பு அவர்கள் இருவருக்கும் இடையில் தனிப்பட்ட ஒரு சந்திப்பு அதனால் அது தொடர்பாக என்னால் எதுவும் கருத்து சொல்ல முடியாது என கூறிவிட்டார்.
