“மத்திய அரசு அழுத்தம் தான் மின் உயர்வுக்கு காரணம்” – செந்தில்பாலாஜி

மற்ற மாநிலத்தை விட குறைவான மின் கட்டணம் தான் தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ளது என கூறியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மின் கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசு அழுத்தம் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.

கரூரில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்ற மின்சார துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது “ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு மின்வாரியத்தின் செயல்பாடு குறித்து தொடர்ந்து முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். மின்வாரியத்தை ஒழுங்குபடுத்தும் நடைமுறை ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மின்வாரியம் 1.59 லட்சம் கோடி கடனிலும் அதற்கு ஆண்டுக்கு 16.511 கோடி வட்டியும் செலுத்தும் நிலையில் இருந்தது.

“ஆரோன் பின்ச்க்கு அடுத்ததாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவது நான் தான்….” – ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஸ்டீவன் ஸ்மித்

கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியம் முற்றிலும் சீரழிக்கப்பட்டு இழுத்து மூடக்கூடிய நிலையில் இருந்தது. அரசு மானியமாக கடந்த ஆண்டு 9000 கோடி வழங்கி மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஸ்டாலின். மத்திய அரசின் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மின் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி கொண்டே வந்தது. மத்திய அரசும் அழுத்தம் கொடுத்த நிலையில் அவர்களின் மின் சந்தைக்கு ரூபாய் 70 கோடி பாக்கி வைத்த நிலையிலே மின்சாரம் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.

அந்த ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் மின்கட்டணம் தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் கருத்து கேட்கும் கூட்டம் நடத்தப்பட்டு கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 3.5 கோடி நுகர்வோர்கள் உள்ள நிலையில் நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் 7385 பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஆண்டுகளில் 2000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படும் புதிய மின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்” செந்தில் பாலாஜி.

Spread the love

Related Posts

மாஸ்டர் பட நாயகன் ஷாந்தனுவை பிட்டு பட நாயகர் என்று வசை பாடிய ப்ளூ சட்டை மாறன் | விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு

சினிமா படங்களை மிகவும் கடுமையாக விமர்சித்து அதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் யூடூப்பில் ரெவியூ செய்யும்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் கொடுக்க வந்த சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு செய்த போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் கொடுக்க வந்த சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு செய்த போலீசார்.

“எதிர்காலத்திற்காக அவர் என்ன செய்தார்” | ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் லாங்கரை பற்றி விமர்சனம் செய்த பேட் கம்மின்ஸ்

கடந்த சில தினங்களாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் திடீரென்று தாமாக