சித்திரைத் திருவிழாவில் அணில்கள் மூலம் மின்தடை ஆகாமல் இருக்க வழிவகை செய்து பார்த்து கொள்ளுங்கள் என சட்டப்பேரவையில் கிண்டல் அடித்து பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செந்தில் பாலாஜி அவர்கள் டிவிட்டர் பக்கத்தில் தெர்மாகோலை தூக்கிக்கொண்டு வைகை ஆற்றுக்கு சென்று நீராவி ஆவதை தடுத்து நிறுத்துங்கள் என கலாய்த்துள்ளர்.

தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியம் மீதான விவாதத்தில் பேசிய திரு செல்லூர் ராஜு அவர்கள் சித்திரை திருவிழா மதுரையில் நடைபெறுகிறது, அதனால் திரு மின்சார துறை அமைச்சர் அங்கு அணில்களை விட்டு மின்தடை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். அவர் இதை சொன்னதும் அங்கிருந்த அமைச்சர்கள் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதனை அங்கிருந்த கண்ட செந்தில்பாலாஜி அப்போது எதுவும் வாய் திறக்கவில்லை.
அதன்பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் வந்து இதற்க்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :- “தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்தும் மின்தடை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் தர்மாகோல் விஞ்ஞானி எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தர்மாகோல் எடுத்துக்கொண்டு கிளம்புங்கள்” என அவர் கலாய்த்து பதிவிட்டுள்ளார்.
