சிம்பு எனக்கு லவ் டார்ச்சர் தராரு … | ஆதாரத்துடன் வெளியிட்ட சீரியல் நடிகை

சீரியலில் நடிக்கும் நடிகை ஸ்ரீநிதி தன்னை சிம்பு லவ் டார்ச்சர் செய்கிறார் என ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 7சி சீரியலில் அறிமுகமாகி பின்னர் யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள், உள்ளிட்ட சீரியல்கள் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் தான் சின்னத்திரை நடிகை. ஸ்ரீநிதி இதற்கு முன்பு வலிமை படம் வெளியான போது. அந்த படத்தை பற்றி விமர்சனம் கொடுத்து தல அஜித் ரசிகர்கள் மத்தியில் பல கண்டனங்களை பெற்றது. அந்த வீடியோவை பார்த்து கடும் கோபத்தில் இருந்த அஜித் ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராம் கமெண்ட் செக்சனில் வந்து “நீயெல்லாம் ஒரு பெண்ணா உன்னை எல்லாம் பலாத்காரம் செய்து விடலாம்” என்று மிகவும் மோசமான கமெண்டுகளை செய்தனர்.

இதனால் மிகவும் மனம் உடைந்து போனார் நடிகை ஸ்ரீநிதி. பிறகு அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் ஒரு வீடியோ போட்டு அதற்கு பிறகு அந்த பிரச்சனையை சுமுகமாக முடிந்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பாக தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டி நடிகர் சிம்புவின் வீட்டிற்கு முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சில புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பகிரப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு மட்டும்தான் போராட்டமா ? காதலுக்கு போராட்டம் இல்லையா ? என்றெல்லாம் பதிவிட்டிருந்தார் ஸ்ரீநிதி.

ஸ்ரீநிதியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. இதனை பார்த்து அவரின் தந்தையும் ஸ்ரீநிதிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீநிதி “நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா, அவர்தான் என்னை லவ் பண்றாரு அவர்கிட்டயே கேளுங்க, என்னை ஏன் டார்ச்சர் பண்றாருன்னு, நான் பொய் சொல்ல விரும்பல அப்பா” என்று பதில் அனுப்பியுள்ளர். அந்த ஸ்கிரீன்ஷாட் போட்டோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த ஸ்கிரீன்ஷாட் காட்டு தீ போல இணையத்தில் பரவ தொடங்கியுள்ளது.

அப்பா டி ராஜேந்தர் மருத்துவமனையில் இருக்கும் நேரத்தில் சிம்புவுக்கு இது தேவையா என பலரும் கேட்டு வருகின்றனர்

Spread the love

Related Posts

புது பட ரிவியூ | சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் கார்கி படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

இன்று சாய்பல்லவி நடித்து, கௌதம் ராமச்சந்திரா இயக்கத்தில் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் வழங்கியிருக்கும் படம் தான்

ஜாக்கி சான் படத்தில் இருந்து அல்லேகாக உருவிய வலிமை பட காட்சி | இப்படியா காபி அடிப்பது ? நெட்டிஸன்கள் வறுத்தெடுக்கின்றனர்

வலிமை படத்தின் இறுதிக்காட்சி ஜாக்கிசான் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக பரப்பப்படும் ஒரு வீடியோ சமூக

IPL Auction 2022 | சென்னையில் இருந்து விடைபெறுகிறார் பாப் டு பிளேஸிஸ்

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம்