பாலியல் தொழிலும் ஒரு தொழில்முறை தான் அதற்குண்டான வயது வந்தவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்த தொழிலை செய்து கொள்ளலாம் அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனைகளையும் அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் தொழிலாளர்களுக்கு சில முக்கியமான உரிமைகளையும் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது பாலியல் தொழில் செய்வதால் ஒருவரை துன்புறுத்தக் கூடாது. அதுவும் ஒரு தொழில்தான் எனவே வயது வந்தவர்கள் என்பதால் முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு.
சில இடத்தில் பாலியல் தொழிலாளர்கள் அவர்களின் தொழில் செய்து கொண்டிருக்கும் போது போலீசாரால் துன்புறுத்தப்பட்டு கைதாகும் அவலமும் ஏற்படுகிறது. சில நேரம் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக பாலியல் தொழிலாளர்களுக்கும் உரிமை வேண்டும் இந்த வழக்கானது கூறுகிறது. பொதுவாக பாலியல் தொழிலாளர்கள் மீது காவல்துறை கடுமையாக நடந்து வருகின்றனர். மேலும் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை தருகின்றனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த சட்டபூர்வமான தீர்ப்பினால் அது அறவே நிறுத்தப்படும்.

பாலியல் தொழிலாளர்கள் அவர்களை தொழிலில் ஈடுபடும் போது கைது நடவடிக்கைகளின் அவர்களின் முகத்தை வெளிப்படுத்துவது தப்பு செய்தவர்கள் போல சித்தரிப்பதை மீடியா அறவே ஒளிபரப்ப கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆணுறைகளை பயன்படுத்துவதை பாலியல் தொழிலாளிகளின் மற்ற சான்றாக காவல்துறை கருதக்கூடாது. மீட்கப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பாலியல் தொழிலாளர்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் சீர்திருத்த இல்லங்களுக்கு அனுப்பவும் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜூலை 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
