திமுகவின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் போட்ட விநாயகர் சதுர்த்தி வாழ்த்து உடனே நீக்கி உள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் தமது விநாயகர் சதுர்த்தி வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார். அப்போது ஒரு போட்டோவை போட்டு அந்த போட்டோவில் உதயநிதி முகத்தையும் ஸ்டாலின் முகத்தையும் வைத்து அதன் பிறகு அண்ணா, பெரியார், கலைஞர் முகங்களை வைத்து அதற்கு கீழே விநாயகர் படத்தை வைத்து அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் என வடிவமைக்கப்பட்ட அந்த போஸ்டரை தனது ட்விட்டர் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த ட்விட்டை போட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அதை டெலிட் செய்திருக்கிறார். தற்போது இதனைக் கண்ட தமிழக பாஜகவின் செகரட்டியான SG சூர்யா அவர்கள். டெலிட் செய்த அவரின் போட்டோவை எடுத்து அவரது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் உதயநிதி மற்றும் ஸ்டாலின் முகத்தை ரவுண்டு செய்து கலைஞர், அண்ணா மற்றும் பெரியார் இருக்கும் இடத்தையும் ரவுண்டு செய்து குறியீட்டு காட்டி இருக்கிறார். மேலும் அந்த போட்டோவை போட்டதோடு மட்டுமில்லாமல் எதற்காக திமுகவில் இருக்கும் அமைச்சர் கயல்விழி இதனை நீக்கினார்கள் ?

இந்துக்களுக்கு எதிராக நடக்கும் திமுக அரசு உங்களை இப்படி செய்ய சொல்லி இருக்கிறதா இந்துக்களுக்கு எதிரான முதல்வர் ஸ்டாலின் இப்படி உங்களை செய்ய சொன்னாரா ? அதனால் தான் நீங்கள் இதை நீக்கி விட்டீர்களா இது பெரிய தவறு என கூறி அந்த போஸ்டை அவர் பதிவிட்டு இருக்கிறார். தற்போது இது வைரலாகி வருகிறது.