தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிதும் பரீட்சையமான நடிகைகள் ஷகீலா மற்றும் கிரண் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டது தமிழ் பிக் பாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த முறை நடிகை கிரண் மற்றும் நடிகை சகிலா பங்கு பெறுவார் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இருவரும் தற்போது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 க்கு போட்டியாளர்களாக சென்று விட்டனர்.

இந்த முறை பிக்பாஸ் சீசன் 7 பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றும் பல பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் இந்த முறை நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள் என சமீபத்தில் ஒரு உத்தேச பட்டியல் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதில் நடிகை கிரண் மற்றும் ஷகிலாவின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தற்போது அந்த இருவருமே அதிரடியாக இந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக கலந்து கொண்டது தமிழ் பிக் பாஸ் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்போ இந்த முறையும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி ப்ராடக்ட் களின் ஆதிக்கம் மட்டுமே நிறைந்து இருக்குமா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பிரபலமான நடிகைகளை போட்டியாளர்களாக பங்கேற்க வைத்து நிகழ்ச்சி டிஆர்பி யில் டாப்பில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் நடிகர் நாகார்ஜுனா.

ஆனால் கடந்த சில சீசன்களில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளர்கள் பங்கேற்காதது ரசிகர்களை அந்த நிகழ்ச்சியுடன் தடுப்பதாக கூறுகின்றனர் விமர்சனங்கள் இழந்த நிலையில் எழுந்த நிலையில் இந்த முறையும் கவர்ச்சி கன்னிகள் ஆன ஷகிலா மற்றும் கிரண் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டது தமிழ் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது.
