பிஸ்ட் படம் குறித்து அந்த படத்தில் நடித்த மலையாள நடிகரே கலாய்த்த சம்பவம் தற்போது விஜய் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
பிஸ்ட படம் கடந்த ஏப்ரல் 13 அன்று ஐந்து மொழிகளில் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை அதிகமாக பெற்றதும். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகவும் ட்ரோல் செய்யப்பட்ட படமாக இந்த படம் இருந்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே பிரபலமான பத்திரிக்கையான “இந்தியா ஹெரால்ட்” பத்திரிகையும் சர்வதேச அளவில் விஜய் அதிகம் கலாய்க்க பட்ட ஒரு ஹீரோ என செய்தியை வெளியிட்டது.
அதனால் பீஸ்ட் படம் விஜய் கேரியரிலேயே ஒரு மோசமான படமாக அமைந்தது. இந்த படத்தில் தீவிரவாதிகளுள் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டோம் சாக்கோ நடித்திருந்தார். இவருக்கு தமிழில் இதுதான் முதல்படம் இவரிடம் ஒரு பேட்டியில் “உங்களுக்கு பீஸ்ட் படம் தமிழில் ஒரு நல்ல எண்ட்ரியாக இருந்ததா” என கேள்வி கேட்கப்பட்டது.
கல்யாணம் முடித்த கையோட வேலையை துவங்கிய நயன்தாரா | அப்செட்டில் இருக்கும் விக்னேஷ் சிவன்

அதற்கு பதிலளித்த அவர் “எனக்கு பீஸ்ட் ஒரு நல்ல என்ட்ரி கிடையாது” என பளிச்சென்று பதிலளித்தார். மேலும் இது குறித்து பேசிய அவர் “பொதுவாக ஒருவர் எடையை தூக்கினால் முகத்தில் சிறு சிரமம் தெரியும் ஆனால் விஜய்க்கு அப்படி எந்த சிரமமும் முகத்தில் தெரிவதாக இல்லை. இது அவரின் மீது குறை அல்ல. இதற்கு படகுழிவினார் தான் முக்கிய காரணம், செட்டில் அவரை சிறிய இடையை கூட தூக்க விடமாட்டார்கள் பின்னர் எப்படி அவருக்கு அந்த பொருளினுடைய இடை தெரியும் ?” என பதிலளித்தார். எனவே அவரின் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் வெறுப்படைய வைத்துள்ளது.
