பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
பப்ஜி மதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடியூப் வலைதளத்தில பப்ஜி என்ற ஆன்லைன் கேம்யை யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து அதில் ஆபாசமாக பேசி பெண்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டான் பப்ஜி மதன், அதனால் இவரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் மீது பெண்களை ஆபாசமாக பேசியது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது, தடை செய்யப்பட்ட செயலியை உபயோகித்தது என இப்படிப்பட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் காரணமாக ஜூன் 18-ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் பப்ஜி மதன். இவர் மீது எக்கச்சக்கமான புகார்கள் வந்ததால் இவர் ஒரு சைபர் குற்றவாளி என கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஜூலை 5ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் சார்பாக ஆட்கொணர்வு மனு பிரபியாக்க பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசும் சென்னை காவல் ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இப்போது மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் பப்ஜி மதன் மீதான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் மிகவும் அபாயகரமான ஒரு விவகாரம் என்பதால் இதற்கு இப்போது உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
