கல்லூரியில் “ராகிங்” செய்யப்பட்டதாக கூறி மொட்டையடித்து சென்ற ஜூனியர் மாணவர்களின் அதிர்ச்சி வீடியோ

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கல்லூரியில் ராகிங் செய்யப்பட்டதாக கூறி மொட்டையடித்து சென்ற ஜூனியர் மாணவர்களின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு மருத்துவ கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை மொட்டையடித்து கையை பின்னால் கட்டி தலை குனிந்து நடக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். அந்த 27 மாணவர்களின் மொட்டை அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து அந்த கல்லூரி தாளாளரிடம் கேட்டபோது இப்படியான சம்பவங்கள் எதுவும் இங்கே நிகழவில்லை, ராகிங் செய்யப்பட்டதற்கான எந்த ஒரு சாட்சியமும் இல்லை. எங்கள் கல்லூரியில் மாணவர்கள் மொட்டை அடித்து வருவது வழக்கம், அதனால் இதை பெரிய விஷயமாக வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் இந்த கல்லூரியில் இதற்கு முன்பு ஏகப்பட்ட ராகிங் சம்பந்தமான விஷயங்கள் நடந்துள்ளதாக புகார்கள் எழுகின்றன. இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் ஒரு ஒரு சீனியர் மாணவன் ராகிங் செய்ததால் அவரிடம் 10 ஆயிரம் அபராதம் வசூலித்து கல்லூரியை விட்டு நீக்கினர் இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டில் ஒரு ஜூனியர் மாணவனை ஒரு சீனியர் மாணவன் சட்டை கிழிய அடித்து விட்டு போன சம்பவமும் அரங்கேறி உள்ளது. இதனால் இங்கே ராகிங் நடக்க நிறைய வாய்ப்புள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.

Spread the love

Related Posts

“இது எல்லாருக்கும் நடக்குறது தான… ” லிப் லாக் காட்சிகளை பற்றி போல்டாக பேசிய விருமாண்டி பட நடிகை அபிராமி

விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி படங்களில் வரும் உதட்டு முத்த (Lip Lock Kiss) காட்சிகளை

“ஓசி ஓசி என கூறி மக்களை ஏளனம் செய்கிறீர்கள்” ? | திமுக அமைச்சர்களை லெப்ட் ரைட் வாங்கிய பாஜக மாநில துணைத்தலைவர் நாராயண் திருப்பதி

திமுக மூத்த அமைச்சர்கள் என்று ஓசி, ஓசி கூறுகிறீர்களே இப்படி கூறி மக்களை எதற்காக ஏளனம்

குலுக்கல் முறையில் அதிமுகாவை வென்ற பாஜக

பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவை சேர்ந்த வேட்பாளர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளராக

x