நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு நாளில் அவரது ரசிகர்கள் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

நடிகை சில்க் ஸ்மிதாவின் 27 வது நினைவு நாளை ஒட்டி அவரது ரசிகர்கள் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்களுக்கு கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் சில்க் ஸ்மிதா. தனது கண்கள் மூலமாகவே நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் இவர். என்னதான் சில்க் ஸ்மிதா ஒரு நல்ல நடிகராக இருந்தாலும் இவரை கவர்ச்சிக்காகவே தமிழ் சினிமாவில் வைத்திருந்தனர். இன்றைய காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களை விட இவருக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருந்தது.

ஆனால் இன்றளவும் அந்த ரசிகர்கள் இவரை நேசித்து கொண்டு தான் இருக்கிறார்கள். தற்போது ஈரோட்டில் ஒரு பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள தேநீர் கடையில் வைத்து குமார் என்பவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு தீவிர ரசிகர் என்பதால் அவரது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவார். நினைவு நாள் என்றால் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள்.

“திமுக எம்.பி-யிடமும், முதலமைச்சர் ஸ்டாலினிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” – குஷ்பூ

தற்போது இதைப் பற்றி அவர் பேசுகையில் :- “நானும் எனது நண்பர்களும் சில்க்ஸ்மிதாவிற்கு தீவிரமான ரசிகர்கள். சில்க்ஸ்மிதாவை வெறும் கவர்ச்சியாக மட்டும் தான் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்படி அவரை பார்ப்பதில்லை. அவர் கரூரில் பிறந்தாலும் ஆந்திர மாநிலத்தில் தான் வளர்ந்தார். அவருக்கு சினிமா நடிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால். சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடினார். அப்போது மலையாள படத்தில் நடித்த பின்னர் வறுமையினால் சினிமாவில் ஒப்பனை கலைஞராக இருந்தார். சைடு ஆர்ட்டிஸ்டிகளுக்கு மேக்கப் போடும் பணியை செய்து வந்தார்.

“அஜித் ஒரு பப்ளிசிட்டி பிரியர், ஈகோ பார்ப்பவர், வடிவேலுவுடன் இணைந்து நடிக்காததற்கும் காரணம் இது தான்” – காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் ஓபன் டாக்

வினு சக்கரவர்த்தி தான் அவருக்கு சிலுக்கு என்னும் கதாபாத்திரத்தில் திரைப்படத்தை அறிமுகப்படுத்தினார். அப்போதிலிருந்து அவருக்கு சில்க் ஸ்மிதா என்று பெயர் வந்தது. இந்த பெரும் ஆளுமை கொண்டு தனது 35 வயதிலேயே வாழ்வை முடித்துக் கொண்டார் சில்க் ஸ்மிதா. தயாரிப்பில் தோல்வி, காதலில் தோல்வி என பல தோல்விகளை அவர் சந்தித்து கடைசியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உண்மையிலேயே அவர் தமிழ் சினிமாவில் இருந்தது ஒரு ஆளுமை. அங்கீகரிக்கத் தெரியாத சமூகத்தின் தோல்வியாக தான் நான் இதை பார்க்கிறேன். நேற்று முளைத்து நாளை வாடும் ஹீரோயிசங்களுக்கு இடையே சில்க் ஸ்மிதா ஒரு நிரந்தரமானவர்” அவர் கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

15 வயது மாணவனுடன் உல்லாசமாக பறந்து சென்ற 26 வயது ஆசிரியை | திருமணம் செய்து கொண்டு மாணவனுடன் தோழி வீட்டில் பதுங்கியிருந்த ஆசிரியை

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த மாணவனுடன், அதே

தேசிய விருதுகளை குவித்த சூரரை போற்று | சிறந்த நடிகர் விருதை தட்டி சென்ற சூர்யா | வேற என்னென்ன அவார்டுகளை யார் யார் பெற்றனர் ?

தேசிய விருதுகளைக் குவித்து வருகிறது சூரரைப் போற்று 68 ஆவது நேஷனல் அவார்ட் வென்றவர்களின் பட்டியல்

மாலை வேலையில் பிடித்த பெண்களுடன் ஆண்கள் தாம்பத்திய உறவு மேற்கொள்ளலாம் | இப்படி ஒரு வினோத கிராமமா ?

மாலை வேளையில் எந்த ஆண்களுடனும் பெண்கள் வெளியே சென்று வரலாம் என்ற கட்டுப்பாடுகளை வைத்திருக்கும் ஒரு

x