தமிழ் சினிமாவில் காதல் பறவைகளாக வலம் வரும் காதல் ஜோடிகள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருக்கும் நாளை மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறவிருக்கிறது. அந்த திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பல பேரை அழைத்து இருக்கின்றனர்.
மேலும் இவர்களின் திருமணம் OTTக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், இந்த கல்யாணத்தை டைரக்ட் செய்ய கௌதம் வாசுதேவ் மேனன் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு வருடங்களாக காதல் ஜோடியாக இருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது திருமணம் செய்துகொள்ளும் செய்தியை கேட்டுக்கும் ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர்.

மேலும் இவர்களின் திருமணத்திற்கு சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோரை அழைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் நயன்தாராவின் முன்னாள் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
