சிம்புக்கு பெண் கேட்டு சென்று அசிங்கப்பட்ட டி.ராஜேந்தர் ?

தனது மகன் சிம்புவுக்கு பெண் கேட்டு சென்று தந்தை டி ராஜேந்தர் அசிங்கப்பட்டதாக தற்போது ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.

கடந்த ஒரு சில வருடங்களாக தன்னுடைய மகன் சிம்புவுக்கு பெண் பார்க்க டி ராஜேந்தர் போராடி வருகிறார். சிம்பு சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கும்போதெல்லாம் தன்னுடைய மகன் எப்படி ஆசைப்படுகிறானோ அப்படியே தான் அவன் திருமணம் நடக்கும் என தெரிவித்து வந்தார். ஹன்சிகா முதல் நயன்தாரா வரை பல முன்னணி நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் சிம்பு. இதில் ஹன்சிகாவுடன் நடந்த அந்த கிசுகிசு காதல் தாண்டி திருமணம் வரை பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் திடீரென இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணமாக பிரிந்து விட்டனர்.

Viral Video | மணப்பெண்ணை கண்டதும் ஓட்டமெடுத்த மாப்பிள்ளை, துரத்தி சென்று கடைசியில் மணமுடித்த மணப்பெண்

தற்போது சிம்புவுக்கு 40 வயது ஆகிவிட்டது, தன்னுடைய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் கிடைக்காததால் உடனடியாக சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என சிம்புவின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக டி ராஜேந்தர் தன்னுடைய சொந்த ஊரான மயிலாடுதுறையில் உள்ள உறவினர்கள் மற்றும் தன்னுடைய சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பெண் கேட்டு சென்றுள்ளார். அப்போது அதில் சிலர் சிலம்பரசனின் வயதை குறிப்பிட்டு பெண் கொடுக்க மறுத்து விட்டதாகவும் இன்னும் சிலர் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு நாங்கள் பெண் கொடுக்க மாட்டோம் எனவும் கூறியிருந்தனர்.

இதனால் தளராத டி ராஜேந்தர் சமீபத்தில் கூட ஒரு தொழிலதிபரின் பெண்ணை சிலம்பரசனுக்கு பெண் கேட்டுள்ளார் அவர்கள் யோசித்து சொல்வதாக தெரிவித்துள்ளனர், பின்னர் சிம்புவின் வயது மற்றும் அவர் சில நடிகைகளுடன் கிசு கிசுவில் ஈடுபட்டதால் அதை காரணம் காட்டி பெண் கொடுக்க மறுத்து விட்டனர். என்னதான் பணம் வசதி பெரிய குடும்பம் என அந்தஸ்தில் இருந்தாலும் சிம்புவுக்கு பெண் கேட்க செல்லும் இடங்களில் எல்லாம் பலர் பெண் கொடுக்க முடியாது என அவரை அசிங்கப்படுத்தி அனுப்புகின்றனர். இதனால் டி ராஜேந்தர் மன உளைச்சலில் உள்ளார் என தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது, இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

EPS இருக்கும் போது எதிர்ப்பு, தற்போது ஆதரவு… சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை பெயர் மாற்றி தொடங்க திட்டம் போட்டிருக்கும் திமுக

கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் தான் இந்த சேலம் எட்டு வழி சாலை திட்டம்.

ரோஹித் ஷர்மாவை முந்தினார் கொல்கத்தா வீரர் மந்தீப் சிங்… எந்த ரெகார்டில் தெரியுமா ?

ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை டக் அவுட் ஆனா வீரர் என்ற மோசமான சாதனைக்கு கொல்கத்தா வீரர்

பரோட்டா சாப்பிட்டதால் இறந்து போன லாரி கிளீனர் | காரணம் என்ன

இடுக்கியில் தொண்டையில் பரோட்டா சிக்கிக்கொண்டதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி

Latest News

Big Stories