பாடகர் கே.கே.வின் மரணத்திற்கு கொல்கத்தா போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர் | உண்மை என்ன ?

பாடகர் கே.கே.வின் மரணத்திற்கு கொல்கத்தா போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று கொல்கத்தாவில் ஒரு இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு வரும் போது மரணம் அடைந்தார். இவருக்கு வயது 53 அவருடைய மரணத்திற்கு நரேந்திர மோடி, அமித்ஷா, வெங்கைய நாயுடு, கமலஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை சமூக வலைதளங்களின் வாயிலாக தெரிவிக்கின்றனர்.

பாடகர் கே.கே மரணத்தை கொல்கத்தா காவல்துறையினர் இது சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் முழுமையான விவரம் என்னவென்று தெரியவரும். மேலும் அவர் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

பாடகர் கே கே மரணத்திற்கு கமலஹாசன் அவர்கள் தங்களுடைய ட்விட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால் “பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கே.கே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள்.” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “பாடகர் கிருஷ்ணகுமார் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன்னுடைய பாடல்கள் மூலம் பல்வேறு விதமான உணர்ச்சிகளை திரையில் கொண்டு வந்தார்.அவரை எப்போதும் அவருடைய பாடல்கள் மூலம் நான் நினைவில் கொள்வோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார். மிரளும் சினிமா பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் என அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இவர் தமிழில பாடிய ஒரு சில பாடல்கள்

உயிரின் உயிரே, கல்யாணம்தான் கட்டிக்கிட்டு, காதலிக்கும் ஆசை, அப்படிப்போடு, நீயே நீயே, காதல் வளர்த்தேன், நினைத்து நினைத்து, அண்டங்காக்கா கொண்டக்காரி, பொய் சொல்லப் போறேன்.

ஆகிய பாடல்கள் ஆடங்கும்.

Spread the love

Related Posts

“ஹிந்துக்களை பகைத்து கொண்டால் எந்த அமைச்சரும் சாலையில் நடமாடமுடியாது” கொதித்தெழுந்த ஜீயருக்கு நெத்தியடி பதிலளித்திருக்கிறார் திருமா

தமிழ்நாட்டில் இருக்கும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் யாரும் தெருவில் நடமாட முடியாது இந்துக்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று

நடிகை ஆண்ட்ரியா நிர்வாண காட்சிகளில் நடிக்க இந்த இயக்குனர் தான் காரணமா, லீக்கான ஆண்ட்ரியா வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் ஆண்ட்ரியா அங்கிளோ இந்தியன் குடும்பத்தை சேர்ந்த இந்த நடிகை

“இந்தியா இந்துக்களின் நாடு தான்” ஆ ராசாவின் இந்து எதிர்ப்பு பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கும் பிரேமலதா

இந்துக்களைப் பற்றி தவறான முறையில் பேசிய ராசாவை ஓங்கி அடிப்பது போல இந்தியா இந்து நாடு

x