சீதாராமம் படத்தில் நடித்த மிருனால் தாகூர் அவர்களின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகம் எடுத்து வருகிறது.
மிருனால் தாக்கூர், துல்கர் சல்மான் நடித்து இந்த வருடம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் சீதாராமம். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரானது. தமிழில் வெளியான இந்த படத்திற்கு மதன் கார்க்கி தான் பாடல் வரிகள் எழுதி இருக்கிறார். என்னதான் இந்த படமும் ஒரு நல்ல படமாக இருந்தாலும் அந்த பாடல் வரியோடு சேர்ந்து இந்த படத்தை பார்க்கும் போது இந்த படமும் அதில் நடிக்கும் நடிகன் நடிகைகளும் இன்னும் அழகாக தெரிகின்றனர்.


தற்போது சோசியல் மீடியாவில் எங்கு சென்றாலும் சீதாராமம் படத்தில் தொடர்புடைய காட்சிகளை தான் நாம் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு இளம் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது தான் அதற்கு காரணம். இப்போது இந்த படத்தில் சீதா ரோலில் நடித்த மிருனாள் தாகூரின் முந்தைய கவர்ச்சி படங்கள் இணையத்தில் தீயாய் பரவ தொடங்கியுள்ளது.


ஒரு நல்ல குடும்பப் பெண்ணாக சேலையுடன் வந்து ஆண்களை ஆர்ப்பரித்த இவர் தற்போது கவர்ச்சி ஆடைகளில் அதைவிட நன்றாகவே இருக்கிறார் என்று பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இணையத்தில் பதிவிடப்பட்ட இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களின் பார்வையையும் பெற்றிருக்கிறது.

