SK20 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த நடிகை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் 20 ஆவது படம் பெயர் வைக்க படாததால் எஸ் கே 20 என்று அழைக்கப்படுகிறது இந்த படத்தை தெலுகுவில் ஜாதி ரத்நாலு என்ற மிகப்பெரும் வெற்றி படத்தை எடுத்த இயக்குனர் தான் இயக்கவிருக்கிறார்.
இந்தப் SK20 படத்தின் கதை என்னவென்றால் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வரும் வெளிநாட்டு இளம்பெண்ணிடம் சிவகார்த்திகேயன் காதல் வயப்பட்டு கடைசியில் அவரையே கரம் பிடிப்பது பற்றி தான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கு டீச்சர் ஆகவும் அந்த வெளிநாட்டு பெண் இங்கிலீஷ் டீச்சராகவும் வருகிறார்.
இந்த படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா என்கிற நடிகை சிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ள நிலையில் படத்தில் ஹீரோயினுக்கு இவர் தமிழ் மற்றும் தெலுங்கு கற்றுக் கொடுக்க, ஹீரோயின் சிவகார்த்திகேயனுக்கு இங்கிலீஷ் கற்று தருகிறார். படத்தின் ஷூட்டிங்கும் சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை எதிர்நோக்கி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.