“Cringe சிவாங்கி” என்று சிவாங்கியை கலாய்த்த நெட்டிசன்… கடுப்பாகி சிவாங்கி செய்த காரியம் – என்ன சொன்னார் தெரியுமா ?

ட்விட்டரில் குக்கு வித் கோமாளி ரசிகர் ஒருவர் இன்று கிரிங்ச் (cringe) சிவாங்கி ஷோவில் இல்லை என சந்தோஷப்பட்டு ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார். அந்த டீவீட்டுக்கு சிவாங்கி ஒரு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் கலாய்த்தும் வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் தாண்டி அந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு விஜய் டிவியில் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக இந்த குக்கு வித் கோமாளி இருந்து வருகிறது. குக்கு வித் கோமாளி சீசன் 1 பெரிதாக பிரபலமாகவில்லை. ஆனால் சீசன் 2வில் பவித்ரா, புகழ், சிவாங்கி, அஸ்வின் என எல்லோரும் இருந்தனர்.அதனால் இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

செருப்பு அணிந்து வளாகத்துக்குள் வந்ததால் நயன் விக்கி மீது கடுப்பில் இருக்கும் தேவஸ்தானம் | சமாதானம் படுத்துமா விக்கியின் மன்னிப்பு கடிதம் ?

தற்போது 3 வது சீசன் தொடங்கி அதுவும் ஓரளவுக்கு பிரபலமாகி வருகிறது. மூன்று வாரத்திற்கு முன் தான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து அந்த மகிழ்ச்சியில் ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்ததனால் கருவுற்றார் என அந்த நிகழ்ச்சியின் செஃப் வெங்கடேஷ் கூறியிருந்தார். ஆனால் உண்மையிலேயே அவர் கூற வந்தது வேறு ஒன்று. ஆனால் மீமீ போடுபவர்கள் அதை தப்பாக புரிந்து கொண்டு இந்த நிகழ்ச்சி பார்த்ததால் தான் ஒரு பெண் கருவுற்றார ? இது எல்லாம் நம்பும்படியாகவ இருக்கிறது ? என அந்த நிகழ்ச்சியைக் கலாய்க்க தொடங்கினர்.

அதன் பிறகு இந்த ஷோவிற்கு கடும் எதிர்ப்பு வந்தது. தற்போது அந்த வரிசையில் சிவங்கியை ஒரு ட்விட்டர் பயனாளர் கலாய்த்துள்ளார். அதாவது இன்று கிரிங்ச் (cringe) சிவாங்கி ஷோவில் இல்லை அதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என ஒரு டெம்ப்ளேட் போட்டு மீமாக பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சிவாங்கி அவர்கள் கூறியதாவது:- “இல்லாத என்ன பத்தி பேசி நேரம் வீணடிப்பதை விட்டுவிட்டு இருக்கிறவங்களை பற்றி பேசினால் இன்னும் சூப்பரா இருக்கும்… அதை பத்தி யோசிங்க” என அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். சோசியல் மீடியாக்களில் சிவாங்கிக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பாளர்கள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். அவர்களுக்கு இந்த ட்வீட் ஒரு பதிலடியாக இருக்கும் என அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Spread the love

Related Posts

பச்சை பொய் பழனிசாமி என்று சவால் விட்ட ஸ்டாலின்

ஊரக உள்ளாட்சித்தேர்தல் பணிகள் அனைத்து கட்சி தலைவர்களும் மக்களை சந்தித்து ஓட்டு கேட்பது வழக்கம் ஆனால்

IPL Auction 2022 | IPL வரலாற்றில் அதிக விலைக்கு போன இரண்டாவது இந்திய வீரர் | மும்பை அணி அசத்தல்.

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம்

“கழிவு நீர்களை உண்டு கொண்டு இருக்கிறோம்” | உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவன் பெற்றோருக்கு வீடியோ கால்

உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கே பல இந்திய மாணவர்கள் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.