அருண்விஜய் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து மழையை பொழிந்த சிவகார்த்திகேயன் | பதிலுக்கு அருண் விஜய் என சொன்னார் ? | நம்பர்களாகி இருக்கும் அருண் விஜய் & சிவா ?

நீண்ட நாட்களாக நடிகர் அருண் விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு மோதல் இருப்பதாக அதனால் இருவரும் சரியாக பேசிக் கொள்வதில்லை என ஒரு பேச்சு அடிபட்டது. அதற்கு காரணம் என்னவென்றால் சரியாக சீமராஜா படம் வெளியானபோது அருண் விஜய் அவரின் ட்விட்டர் பக்கத்தில் யாரெல்லாம் ஹீரோவாக நடிக்கணும்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியும் யார் உண்மையான ஹீரோ என்று என ட்வீட் செய்து சிவகார்த்திகேயனை மறைமுகமாக கலாய்த்தார். அந்த நேரத்தில் அருண்விஜய் உடனே அடுத்த நாள் பல்டி அடித்து இது நான் ட்வீட் செய்யவில்லை என்னோட ட்விட்டர் ஹேக் செய்து விட்டனர் என மழுப்பினார்.

இதனால் மனமுடைந்து போன சிவகார்த்திகேயனும் அவரது ரசிகர்களும் அருண் விஜய்யை பார்த்தாலே சமூக வலைதளங்களில் வசைபாடி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயனும் அவருடைய மிஸ்டர் லோக்கல் படத்தில் ஒரு வசனத்தை வைத்திருப்பார். சதீஸ் சிவகார்த்திகேயனை பார்த்து நீ எல்லாம் ஹீரோவா என மனசுக்குள் கும்பிடுவார். அந்த மனக்குமுறல் சிவகார்த்திகேயன் காதில் விழுந்து என்னப்பா ரொம்ப காண்டா இருக்கீங்க போல என் மேல என்று பேசுவார் அதற்கு சதீஸ் அவர்கள் இல்லை இல்லை என் வாயை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க அப்படி என பதில் வசனம் கூறி அருண் விஜய்யை அந்த இடத்தில் சரமாரியாக தாக்கி இருப்பார்.

“சித்ராவின் வீட்டில் ஆணுறைகள் ஒரு டப்பா இருந்தது, அவ நல்லவ கிடையாது…. சித்ரா மரணத்தில் திடுக்கிடும் திருப்பம் | தோழியின் குற்றசாட்டு

இதனால் இவர்களுக்குள் ஒரு மோதல் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது தற்போது அருண் விஜய் அவர்கள் அவரின் டுவிட்டர் பக்கத்தில் தனது மகனுக்கு பிறந்தநாள் எனவும் அவருக்கு உங்களின் வாழ்த்துக்கள் தேவைப்படுகிறது எனவும் ட்விட்டரில் ட்விட் செய்திருந்தார். அவரின் மகன் வேறுயாருமில்லை தற்போது அமேசன் பிரைமில் சூர்யாவின் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் ஓ மை டாக் படத்தின் ஹீரோவாக வரும் அந்த சின்ன பையன் தான் அருண் விஜய்யின் மகன்.

அவருக்கு தற்போது பிறந்தநாள் கொண்டாடும் வகையில் சிவகார்த்திகேயன் அருண் விஜய்யின் ட்வீட்டை காப்பி செய்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி உன்னுடைய நடிப்பை நான் ஓ மை டாக் படத்தின் மூலம் பார்த்து மகிழ்ந்தேன். நீ மென்மேலும் வளர வேண்டும் உன்னுடைய நடிப்பு திறமைக்கும் உன்னுடைய படிப்பிற்கும் நீண்ட தூரம் வளர என்னுடைய வாழ்த்துக்கள் என அன்பை பொழிந்தார்.

அதற்கு ரிப்ளை செய்த அருண் விஜய் அவர்கள் நீங்கள் என் மகனுக்காக வாழ்த்துக்கள் சொன்னது மிகவும் மகிழ்ச்சி இந்த வாழ்த்தை நான் கண்டிப்பாக அவனிடம் கொண்டு போய் சேர்ப்பேன் நன்றிகள் என அந்த ட்வீட்டை அவர் முடித்தார்.

தற்போது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. என்னதான் இவர்களுக்குள் சண்டை மூண்டாலும் அவரின் மகனுக்கு விஷ் பண்ண வேண்டும் என்று அந்த நல்ல மனது சிவகார்த்திகேயனுக்கு இருப்பதால்தான் அவர் மென்மேலும் உயர்ந்து கொண்டே இருக்கிறார் என்று அவரின் ரசிகர்கள் பெருமித பட்டு கொண்டிருக்கின்றனர்.

Spread the love

Related Posts

“ஜெயலிலதாவின் மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, அன்றும், இன்றும் எனக்கு சசிகலா மீது மரியாதை உள்ளது” | கட்சி மாறிய OPS

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில்

பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்ந்து கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…தொடரும்

“எடப்பாடி ஆதரவாளர்ன்னு சொன்ன அப்பறோம் தான் அடிச்சாங்க” அதிமுக ஆலோசனை கூட்டத்தில் EPS ஆதரவாளருக்கு அடி உதை

சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து நடக்கப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரை

x