இப்படி நடந்திருக்க கூடாது …. | இனி இவர் ஐபிஎல் போட்டியில் ஆடுவார ?? மும்பை ரசிகர்கள் சோகம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்தான் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் வெற்றிக்கு இவர் முதுகெலும்பாக இருந்து சில போட்டிகளில் வெற்றியை தேடித் தந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருக்கு தற்போது இந்திய அணியில் ஆட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு காயத்தினால் அவரால் வரப்போகிற ஸ்ரீலங்கா உடனான போட்டியில் ஆட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

கையில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக எலும்பு முறிவு சிகிச்சை ஏதேனும் செய்ய வேண்டுமா என்று மருத்துவ குழு இன்று ஆலோசனை கூறும் எனவும் மேலும் இதற்கு நீண்ட நாட்கள் ஓய்வு தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அப்படி நீண்ட நாட்கள் ஓய்வு எடுத்தால் இவர் ஐபிஎல் வரும்போது மும்பை அணிக்காக விளையாடுவது மிகவும் கடினம் எனவும் ஐபிஎல் ரசிகர்கள் மற்றும் மும்பை ரசிகர்களும் வருத்தம் அடைந்திருக்கின்றனர். இவர் இல்லை என்றால் அது மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Surya Kumar Yadhav

இப்போது இவருக்கு பதிலாக மாற்று வீரர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் ஷிகர் தவான், சுப்மன் கில், மயங்க் அகர்வால், ஷாருக்கான் போன்ற வீரர்கலை பட்டியலில் எடுத்திருக்கின்றனர். இதில் யாரேனும் ஒருவர் சூர்யகுமார் யாதவ்விற்கு பதிலாக ஸ்ரீலங்கா தொடரில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்து சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை டீமில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

வேற யாராவது எங்கள தொட்டா நாங்க சும்மா இருக்கமாட்டோம் | விஜயை கலாய்த்த மகேஷ் பாபு ரசிகர்களை வெச்சு செய்த அஜித் ரசிகர்கள்

சமூக வலைதளத்தில் எப்போதுமே அஜித் மட்டும் விஜய் ரசிகர்கள் மோதல் வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

உள்ளாடையுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி விடியோவை வெளியிட்ட நடிகை யாஷிகா

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான கதாநாயகியாக வலம் வருபவர். கொஞ்ச மாதங்களுக்கு முன்பு

போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமீன் கிடைக்க அன்பில் மகேஷ் ஆதரவாளர் உதவியாக இருப்பதாக தகவல் ?

150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பைக் ஓட்டி போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் யூடியூபர்