என்னுடைய அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி நிதி வசூலித்து மோசடி செய்து வருவதாக சினேகன் அவர்கள் குற்றசாட்டு வைத்திருக்கும் நிலையில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி நான் குற்றம் செய்ததை நிரூபித்தால் பாஜகவை விட்டு விலக தயார் என கூறியுள்ளார்.
சினிமா துறையில் பிரபல பாடலாசிரியராக இருப்பவர் தான் சினேகன் இவர் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்று பாஜகவை சேர்த்த சின்னத்திரை நடிகர் ஜெயலட்சுமி மீது புகார் அளித்தார். பின்னால் செய்தியாளர்களை சந்தித்து : – “கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிய சினேகம் என்ற அறக்கட்டளை மூலமாக நான் பலருக்கு உதவி செய்து வருகிறேன் தற்போது சமூக வலைதளத்தில் என்னுடைய ஃபவுண்டேஷன் பெயரை வைத்து சிலர் பணம் வசூலித்து வருகின்றனர் என்று வருமானத்துறை எனக்கு அறிவித்தது.’

இது தொடர்பாக நான் விசாரித்ததில் சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி பாஜக பிரமுகரும் நடிகையும் ஆன ஜெயலட்சுமி பண மோசடியில் ஈடுபட்டதனால் தனது வழக்கறிஞர் மூலமாக ஜெயலஷ்மிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சினேகன். ஆனால் அதில் விலாசம் தவறாக இருப்பதால் திரும்பி வந்துவிட்டது. ஜெயலட்சுமி இடம் நான் இது குறித்து விசாரித்த போது நேரில் வாங்க காபி சாப்பிட்டு பேசலாம் என கூறுகிறார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சியில் தொலைபேசி வாயிலாக விளக்கம் தெரிவித்த ஜெயலஷ்மி அவர்கள் :- “ஏதோ ஒரு அரசியல் நோக்கத்திற்காக என் மீது குற்றம் சுமத்துகிறார் சினேகன். எனக்கு இதெல்லாம் தேவையா ? அவருடைய பெயரை வைத்து நான் ஏன் பணம் சம்பத்திக வேண்டும் ? அவர் சினேகன் என்ற பெயர் வைத்திருக்கிறார் என்று எனக்கு இது மூலமாகத்தான் தெரியும். இவர் எப்படி ஒரு அறக்கட்டளை வைத்திருக்கிறார் என்று தெரியும் அளவிற்கு இவர் அவ்வளவு பெரிய ஃபேமஸான ஆளும் கிடையாது.

மேலும் அவரை நான் டீ சாப்பிட அழைத்தேன் என்று கூறுகிறார். எனக்கு டீ காபி குடிக்கும் பழக்கமே கிடையாது நான் யாரையும் அப்படி அழைக்கவும் மாட்டேன். இதுபோன்று அரசியல் வைத்து கட்டப்பஞ்சாயத்து பண்ண எனக்கு பிடிக்காது. அதில் நான் ஈடுபடுவதும் இல்லை. சிநேகம் என்ற பெயரில் நான் அறக்கட்டளை வைத்திருக்கிறேன். எனது அறக்கட்டளைக்கு லட்சக்கணக்கான பானங்கள் எதுவும் வர கிடையாது. ஐடியில் பிரச்சனை வரும் அளவிற்கு நான் அவ்வளவு பெரிய டிரான்ஸ்ஆக்சன் எதுவும் செய்யவில்லை. ஒரு வேலை நான் சிநேகம் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செய்தேன் என்பதை சிறிய அளவில் நிரூபித்தால் கூட நான் பாஜகவை விட்டு விலக தயாராக இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.