பீகார் மாநிலத்தில் ராம நவமியை முன்னிட்டு மசூதியில் சில காவி உடை அணிந்த நபர்கள் காவி கொடியை மசூதியில் ஏற்றிய வீடியோ ஒன்று பரவி வருகிறது.

நாடு முழுவதும் ஹிந்து பண்டிகையான ராம நவமியை நேற்று இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இருப்பினும் ஒரு சில வட மாநிலங்களில் யாரும் எதிர் பார்க்காத வகையில் சில அசம்பாவிதங்கள் அரங்கேறியுள்ளது. டெல்லியில் ராம நவமியின் போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இறைச்சி சாப்பிடுவதால் அவர்களை ஏ.பி.வி.பி பார்ட்டியை சார்ந்த சிலர் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து போராட்டம் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இதை தொடர்ந்து நேற்று பீகார் மாநிலம் முசாபுர் பகுதியில் உள்ள முஹம்மதுபுர் என்னும் கிராமப்பகுதியில் காவி உடை அணிந்த ஒரு அமைப்பினர் காவி கொடிகளை ஏந்தி இரண்டு சக்கர வாகனங்களில் வந்து மசூதியில் காவி கொடியை ஏற்றினர். அவர்களின் கையில் பெரிய வாலும் உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது ஒரு விதமான அச்சம் வந்துவிடுகிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் கையில் வைத்திருக்கும் வாள் தான்.


அது மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பிடித்திருக்கின்றனர். அதனால் எதிரில் நிற்கும் யாருக்கும் காயம் ஏற்பட்டுவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மசூதியின் மதில் மீது ஏறி காவிக் கொடிகள் பறக்க விடுகின்றனர். இதையெல்லாம் மத வெறியை துண்டும் செயலாக இல்லையா என கேள்வியும் எழுகிறது. அதற்கு காவல்துறையும் நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று சொல்கிறார்களே தவிர இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.
रामनवमी के जुलूस के दौरान मस्जिद के गेट पर चढ़कर भगवा झंडा फहरा दिया.
— Utkarsh Singh (@UtkarshSingh_) April 11, 2022
तस्वीरें बिहार में मुजफ्फरपुर के मोहम्मदपुर गांव की हैं. पुलिस ने कहा- जाँच चल रही है, अभी तक किसी की गिरफ़्तारी नहीं हुई है. pic.twitter.com/5t9jh3IxgO