ஆயிரம் கோவில் கட்டுவதை விட நடிகர் சூரி அடித்த அந்தர் பல்டி சர்ச்சை பேச்சுக்கு சூரி மக்களிடம் மன்னிப்பு ?

ஆயிரம் கோவில்கட்டுவதை விட ஒரு குழந்தையை படிக்கவெக்கறது பல ஜென்மம் பேசும் என நடிகர் சூரி விருமான் திரைப்பட இசைவெளியீட்டு விசாவில் பேசியது மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது, ஏன் ஹிந்துக்களை குறிவைத்து பேசுகிறாய், சர்ச் மற்றும் மசூதி பற்றி சொல்லலாமே ஏன் ஆயிரம் கோவில் என குறிப்பிட்டு சொன்னாய் என பலரும் சமூகவலைத்தளங்களில் நடிகர் சூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் இந்நிலையில் இதனை இப்படியே விட்டால் பெரிய பிரச்சனையில் முடியும் என அறிந்த நடிகர் சூரி இன்று நடந்த விருமன் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் மேடையில் ஏறி அவர் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டு, அதற்க்கு விளக்கமும் அளித்துள்ளார்.

சூரி அளித்த விளக்கம்

தப்பாநெனச்சிக்காதிங்க நான் ஒன்னும் மட்டும் சொல்லிடறேன் ஓர் எதார்த்தமாக தான் பேசினேன் தவிர வேறு உள்நோக்கம் கிடையாது நான் எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பும் ஆத்தா மீனாட்சியை தொட்டு தான் ஆரம்பிப்பேன் அன்னிக்கு தெரியாம எதார்த்தமாக சொல்லிட்டேன் ஒரு ஆயிரம் அன்னச்சத்திரம் கட்டுவதை காட்டிலும் ஆயிரம் கோவில்கள் கட்டுவதை காட்டிலும் ஒரு ஏழைக்கு ஒரு சிறந்த கல்வியை கொடுப்பது பல ஜென்மங்கள் பேசும் என எதார்த்தமாக சொல்லிட்டேன், அனால் நான் யார் மனசையும் புண்படுத்த சொல்லல கோவிலுக்கு எதிரானவன் நான் கிடையாது, நானும் சாமி கும்மிடுகிறவன் தான் மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன், என்னுடைய மதுரை ஹோட்டலில் கூட மதுரை அம்மனின் படம் தான் வெச்சிருக்குறேன், எந்த விஷயமாக இருந்தாலும் ஆத்தா மீனாட்சி அம்மன் பெயரை சொல்லித்தான் ஆரம்பிப்பேன் அண்ணிக்கும் ஆத்தா பெயரை சொல்லித்தான் ஆரம்பிச்சேன, அனால் சிலபேருக்கு நான் பேசுனது தப்பா புரியப்பற்றுக்கு தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க கண்டிப்பா இப்போ சொல்றேன் ரொம்ப தாழ்மையோடு கெடுக்குறேன் யாரும் தப்ப நினைக்கவேண்டாம் நான் எந்த கோவிலுக்கும் எதிரானவன் கிடையாது, நான் அப்படி பேச காரணம் நான் படிக்காதவன் எனக்கு படிப்பு கம்மி நான் படிக்கதனால நிறைய இடத்துல மனசு ஒடஞ்சி இருந்திருக்கேன் அதனால எல்லாரும் நல்ல படிக்கணும் அன்னிக்கி எல்லா ரசிகர்களும் வந்திருந்தாங்க இங்க படிப்பு பத்தி சொல்லாம வேற எங்க நம்ம சொல்ல போறோம் அணு சொன்னேன் அத கூட நான் சொல்லல மகா கவி பாரதியார் சொன்னது, கல்வியோடு முக்கியத்துவத்தை உணரத்தான் அவர் சொன்னாரு அவர் உணர்ந்ததை தான் நானும் சொன்னேன் மத்தபடி நான் தவறாக வேற எதுவும் சொல்லவில்லை நான் எப்பவும் மீனாட்சியின் தீவிர பக்தன் இப்பவும் சொல்றேன் எல்லாத்துக்கும் கல்வி வேணும் ஆத்தா மீனாட்ச்சி எல்லாத்துக்கும் கல்வி கொடுப்பாங்க அதை கொடுக்கனுயம் அணு நான் வேண்டிக்குறேன் என்று தனது உரையை முடித்தார் காமெடி நடிகர் சூரி

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox