ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது ICC போட்ட புது ரூல்ஸ் இதோ

சர்வதேச கிரிக்கெட் வாரியம் பல புதிய ரூல்களை அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து அமல் படுத்த உள்ளது அது என்னன்ன என்பது கீழ்வருமாறு :-

ஒரு பேட்ஸ்மேன் கேட்ச் செய்யப்பட்டு அவுட் ஆனால் புது பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக்கில் தான் இருக்க வேண்டும். நான் ஸ்ட்ரைக்கில் இருக்கக் கூடாது. என்ன தான் கிராஸ் ஆகி இருந்தாலும், புதிதாக வந்த பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக்கில் தான் இருக்க வேண்டும். மேலும் இந்த ரூல் ஏற்கனவே ஐபிஎலில் கடைபிடிக்க பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலகட்டத்தில் பந்தை பளபளப்பாக்க எச்சியை பயன்படுத்தக் கூடாது என கிரிக்கெட் கவுன்சில் (ICC) கூறியிருந்தது. தற்போது அந்த விவகாரத்தை முழுவதுமாக தடையென கூறி இருக்கிறது. அதன்படி கொரோனா இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி இனிமேல் பந்தை ஜொலிக்க வைக்க எப்போதுமே எச்சியை பயன்படுத்தக் கூடாது என அதிரடி தடையை போட்டு இருக்கிறது.

ஏற்கனவே ஆடிக்கொண்டிருந்த பேட்ஸ்மேன் அவுட் ஆகி போய்விட்ட பிறகு புதிதாக வரும் பேட்ஸ்மேன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இரண்டு நிமிடத்திற்குல் பிட்சுக்கு வந்து சேர வேண்டும். இதுவே டி20 போட்டிகளில் வெறும் 90 வினாடிக்குள் வந்து சேர வேண்டும்.

தீண்ட தகாத சாதி எது என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

பேட்ஸ்மேன் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏதேனும் பந்து பிட்ச்சிக்கு வெளியே சென்றால் அதை அடிக்க பேட்ஸ்மேன் முன்வரக்கூடாது. அவருடைய உடம்பில் ஏதேனும் ஒரு பகுதி பிட்ச்சில் இருக்க வேண்டும் அல்லது அவருடைய பேட் ஆவது பிச்சில் இருக்க வேண்டும். அப்படி எதுவுமே இல்லாமல் பிட்சுக்கு வெளியே வந்து ஒரு பந்தை பேட்ஸ்மேன் அடிக்க முற்பட்டால் அது டெட் பால் என அம்பையரால் கூறப்படும். பின்பு நோபால் என்றும் சொல்லப்படும்.

பந்து வீச்சாளர் பந்தை போடுவதற்காக ஓடி வரும் போது அந்த நேரத்தில் பீல்டிங்கை மாற்றினால் பேட்டிங் ஆடும் அணியினருக்கு ஐந்து ரன்கள் இலவசமாக கொடுக்கப்படும்.

இனிமேல் “Mankad” போன்ற எல்லா வகையான விக்கெட்டுகளும் ரன் அவுட் என்ற அடிப்படையில் சேரும்.

பந்துவீச்சாளர் பந்தை போடுவதற்கு முன்பே பேட்ஸ்மேன் ஏறி வந்து ஆட முற்பட்டால், பந்தை த்ரோ செய்து அவரை ரன் அவுட் ஆக்குவதற்கு முயற்சிப்பது டெட்பால் என்று கருதப்படும்.

டி20 போட்டிகளில் ஒரு டீம் பவுலிங் போட எடுத்துக் கொள்ளப்படும் நேரம் அதிகமாக சென்றால் ஒரு ஒரு ஓவருக்கும் ஒரு ஒரு பில்டரை உள்ளே வைக்க வேண்டும். அதேபோன்ற ரூல்ஸ் தற்போது ஒரு நாள் போட்டிகளிலும் 2023 50 ஓவர் உலகக்கோப்பை சூப்பர் லீக் ஆட்டத்திற்கு பிறகு கடைபிடிக்கப்படும்.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox