இலங்கையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் தற்போது மீண்டும் போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளது. அதனால் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தற்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பெட்ரோல் டீசல் உணவு வகைகளின் விலை கூட கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களுக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலி காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்சா பதவியை ராஜினாமா செய்தது மட்டுமல்லாமல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கம் பதவி ஏற்றுள்ளார்.
பிரதமர் சுட்டு கொல்லப்பட்டார் | பரபரப்பில் நாடு | மோடியை தாக்கிய பேரிடி

தற்போது ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே தான் போகிறது. மேலும் எரிபொருள் இன்னும் ஒரு நாள் மட்டும் தான் மீதம் இருக்கிறது என்றும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது என்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. முன்னதாக அங்கு எரிபொருள் பிரச்சனையை சமாளிக்க இந்தியா நாலு முறை பெட்ரோல் டீசல் அனுப்பி இருந்தது அதே சமயம் அத்தியாவசிய தேவைகளுக்கும் பொதுமக்களுக்கு நடந்தே பலர் கிலோ மீட்டர் தூரம் சென்று வருகின்றனர்.

ஆனால் மக்கள் போராட்டம் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனிடையே இன்று காலை அந்த நாட்டின் அதிபரும் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். காவல்துறையினராலும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மக்களின் போராட்டத்திற்கு அச்சமடைந்த கோத்தப்பையா ராஜபக்க்ஷ தனது அதிகாரப்பூர் மாளிகையை விட்டு தப்பி ஓடி விட்டார்.
இந்த நிலையில் அதிபர் மாளிகைக்குள்ளேயே போராட்டக்காரர்கள் சென்றுள்ளதால் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்களையும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
#aragalaya protestors inside the residence of the #President. #ProtestLK #aragalaya #EconomicCrisisLK #CountryToColombo #GotaGoGama #OccupyGalleFace #GoHomeGota #occupypresidentshouse pic.twitter.com/bfTbqQ39wc
— EconomyNext Sri Lanka (@Economynext) July 9, 2022