நானும் என் மகனும் சாலைகளில் சென்றால் எங்களை அண்ணன் தம்பி என தான் கூறுவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா நகரில் ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் சென்டர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் ஐந்து வாரங்களுக்கு ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து முதலிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் நம்முடைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்து கொண்டு கூடைப்பந்து பேட்மிட்டன் டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை விளையாடி வந்தார். மேலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்ற முதலமைச்சர் உடன் பொதுமக்கள் மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் சிறுமியர்கள் செல்பி எடுத்து அந்த தருணத்தை மகிழ்ந்தனர்.
பட வாய்ப்புக்காக படு கவர்ச்சி காட்டும் நடிகை பூனம் பஜ்வா

இதன் பிறகு இது குறித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியபோது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாலையில் நான் ஜிம் உடற்பயிற்சி செய்வேன் காலையில் யோகா 5 கிலோ மீட்டர் வாக்கிங் செல்கிறேன். எனக்கு 70 வயதை நெருங்குகிறது. மேலும் இந்த வயதில் நான் கொரானா தொற்றில் இருந்து மீள முடிந்ததற்கு காரணம் என்னுடைய உடற்பயிற்சி தான் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். மேலும் எனது வயதை நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
நானும் எனது மகனும் சென்றால் அண்ணன் தம்பி என்று தான் கூறுவார்கள் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் உடலை பாதுகாக்க என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து வருகிறேன். மேலும் வயிறு முட்ட உணவு உட்கொள்ளக் கூடாது எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதனால் எந்த டென்ஷனும் இல்லாமல் நம்முடைய சகஜமான வாழ்க்கையை நாம் வாழலாம். நான் எங்கு சென்றாலும் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவறமாட்டேன் என அவர் கூறினார்.
