கொரோனா தோற்று காரணமாக அவதிப்பட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் முதமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் :- “சிறிது நாட்களாக உடல்நிலை சரியாக இல்லை, அதனால் நான் கோவிட் டெஸ்ட் செய்தேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது முடிவு செய்யப்பட்டது. அதனால் மக்கள் ஆகிய நீங்களும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்போடு இருங்கள்'” என தெரிவித்திருந்தார். இதனைக் கண்டு பல திமுக ஆதரவாளர்களும் பிரமுகர்களும் அவருக்கு சீக்கிரமாக குணமடைய வேண்டும் என தெரிவித்து வந்தனர்.

தற்போது மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவிரி மருத்துவமனை ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அதாவது “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது” என அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தற்போது இது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. வெகு விரைவில் தமிழக முதலமைச்சர் குணமடைய வேண்டும் என பலரும் வேண்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினை இந்திய பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக உடல் நலத்தை கேட்டு கண்டறிந்து நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது.
