தமிழ்நாட்டில் திமுக 70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வந்த முக ஸ்டாலின் அங்கு மேடையில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் “திமுக ஆட்சியில் 70% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன, எஞ்சிய 30 சதவீத வாக்குறுதிகளையும் கூடிய சீக்கிரம் நிறைவேற்றப்படும்” என உறுதி அளித்துள்ளார்.

மேலும் “மனு அளிக்கும் போதே நிச்சயம் நிறைவேறி விடும் என்று நம்பிக்கையையும் மக்கள் முகத்தில் தெரிகிறது” என அவர் கூறியுள்ளார்.
