இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் என்பதற்காக முதல் முறையாக தமிழ்நாட்டில் காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கும் இந்த திட்டம் இந்திய முழுவதும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால் இந்தியாவில் இதுவரை மதிய உணவு திட்டம் மட்டும் தான் இருந்து வருகிறது. ஆனால் தற்போது காலை உணவு திட்டமும் அறிமுகப்படுத்தி முன்னாடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மேலும் தமிழ்நாட்டைப் பார்த்து தான் மற்ற மாநிலங்களும் மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தது. என்பது குறிக்கத்தக்கது. இன்று வரை கூட மத்திய உணவில் 5 முட்டை போடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று சொன்னால் மிகை ஆகாது.
மேலும் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கும் திட்டமும் முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது காலை உணவிலும் நாம் தான் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 296 கிராம பஞ்சாயத்துகளில் சோதனை முறைகளில் இந்த காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இது மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது. தற்போது இந்த காலை உணவு திட்டத்தை மாணவர்களுடன் அமர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். தற்போது இதற்கு பல கண்டனங்கள் எழுந்துள்ளது. ஏனென்றால் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு திட்டத்தை தொடங்கிய ஸ்டாலின் அவர்கள் பாதி சாப்பாட்டை தட்டிலேயே வைத்துவிட்டு அதிலேயே கை கழுவி இருக்கிறார்.

இதனை பார்த்து நெட்டிசன்கள் பலரும் தற்போ து தங்களது கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் பாஜகவினர் இந்த வீடியோவை பதிவிட்டு சாப்பாட்டில் கை கழுவி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் என்று மறைமுகமாக பலர் முதல்வரை தாக்கி வருகின்றனர். என்னதான் கோடி கோடியாக சொத்து வைத்திருக்கும் பணக்கார குடும்பத்தில் இருந்தாலும் சாப்பாட்டில் கை கழுவுவது நியாயமா ? எனவும் பலர் கேட்டு வருகின்றனர். என்னதான் நாம் தொலைநோக்கு பார்வையுடன் நல்ல காரியங்களை செய்தாலும் இதுபோன்று சில தவறுகள் செய்வதை தான் எல்லோரும் பெரிதாக பார்ப்பார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
Aren’t you ashamed Chief Minister Mr.@MKStalin ? If you want just photo-ops why not very specific about it in the beginning?
— SG Suryah (@SuryahSG) September 15, 2022
Why waste food like this? Multi-Billionaires like you & your family obviously wouldn’t know the importance of food.
SHAME ON YOU!pic.twitter.com/rQAAvvPLyX