தமிழகத்தில் இருக்கும் இந்துக்களுக்கு மட்டும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லாமல் கேரளா மக்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தற்போது இங்கிருக்கும் மக்களை வெறுப்படைய செய்துள்ளது இவரை தற்போது இணையத்தில் இது தொடர்பாக விமர்சித்தும் வருகின்றனர்.

கேரளாவில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் அன்று ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். எப்படி நமக்கு பொங்கல் பண்டிகை இருக்கிறதோ அதுபோன்று கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை. என்னதான் இந்துக்களுக்கு இது முதன்மையான பண்டிகை என்றாலும் மத்த மதத்தினரும் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர். இந்நிலையில் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கலை கட்டியுள்ளன. வீடுகள் தோறும் பல வண்ணக் கோலங்களை போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் “உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு தமிழ்நாட்டின் சார்பாக எனது ஓணம் திருநாள் வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன், அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதரத்துவமும் நம் வலிமை என்பதை பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டு திருவிழாக்கள் அமையட்டும்” இவ்வாறு அதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார் இந்த நிலையில் தான் இவரை ஏன் தமிழ் மக்களுக்கு இப்படி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து மட்டும் சொல்லவில்லை என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.